தமிழகத்தில் நுழைந்து கொலை செய்து கொள்ளையடித்த பவாரியா கும்பலை ஒழித்த டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஆர்.ஜாங்கிட் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி பிறந்தார். இவரது முழுப்பெயர் சங்காராம் ஜாங்கிட். நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜாங்கிட் முதுகலை பொருளாதாரம் படித்தார். பின்னர் அங்குள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். அதன்பின் இவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 1985 ஆம் ஆண்டில் ஐ.பி.எஸ் பதவி பெற்றார். […]
