ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த புதுப்பட்டி, இந்திரா காலனி பகுதியில் இன்று அதிகாலை 5 மணி அளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வத்ராயிருப்பு காவல்துறையினர் வீட்டினுள் இருந்த தங்கேஸ்வரன் என்ற 20 வயது இளைஞனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களையும் பறிமுதல் […]
