பாகிஸ்தானில் இலங்கை நாட்டை சேர்ந்தவர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இயங்கிவரும் தொழிற்சாலையில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா என்பவர் பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவரது அலுவலகம் அருகே ஒட்டப்பட்டிருந்த“தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான்” அமைப்பு போஸ்டரை அவர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தொழிற்சாலையில் இருந்த இருவர் பார்த்து அவர்கள் மூலம் செவி வழி செய்தியாக பலருக்கு சென்றதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் […]
