இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்பட்டவர் ஸ்ரீதேவி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் ஸ்ரீதேவி. இவரது தந்தை ஐயப்பன் ஒரு வழக்கறிஞர். பெரியப்பா ஜனதா கட்சி காலத்தில் எம்எல்ஏவாக இருந்தவர். ஐயப்பன் ராஜேஸ்வரி தம்பதிக்கு 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி பிறந்த ஸ்ரீதேவி ஸ்ரீ அம்மா என்ற பெயருடன் வளர்ந்து நான்காவது வயதிலேயே துணைவன் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் முருகர் […]
