மத்தியபிரதேசத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியபிரதேசம் இந்தூரில் போக்குவரத்து சிக்னல் விளக்கு வேலை செய்யாததால் இரவு நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கிக்கொண்ட மத்தியபிரதேச விளையாட்டுத்துறை அமைச்சர் ஜித்து பத்மாரி தனது காரில் இருந்து இறங்கி போக்குவரத்தை சீர் செய்ய தொடங்கினார். அவருக்கு பொதுமக்கள் சிலர் உதவி செய்யவே போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனங்கள் நகரத் தொடங்கினார். இந்த காட்சி தற்போது […]
