Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஹெட்மயர், லூவிஸ்!

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து ஹெய்மயர், லூவிஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. தற்போது அந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் யாரும் எதிர்பாராத வகையில் இளம் வீரர்களான லூவிஸ், ஹெட்மயர் இருவரும் நீக்கப்பட்டு, அனுபவ வீரர் டேரன் பிராவோ, போவ்மன் போவல் ஆகியோர் தேர்வு […]

Categories
கால் பந்து விளையாட்டு

கொரோனாவால் தள்ளிப்போன கால்பந்து போட்டிகள் …!!

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், சீன கால்பந்து கிளப் அணிகள் ஆடவுள்ள ஏ.எஃப்.சி. சாம்பியன்ஸ் லீக் தொடரின் குரூப் சுற்றுப்போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. சீனாவின் ஹூபே உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை இந்த வைரஸுக்கு 492 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகள் முழுமையான பரிசோதனை செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாம்பியனான இந்தியா… அபராதம் விதித்து ஷாக் கொடுத்த ஐசிசி …!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் தாமதமாகப் பந்து வீசியதற்காக இந்திய அணிக்குத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி நேற்று மவுண்ட் மௌங்கனுய் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா விளங்கினார். அவர் 61 ரன்கள் எடுத்திருந்த போது பின்னங்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் பாதியிலேயே பெவிலியன் திரும்பினார். இதனால், இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹிட்மேன் இடத்தைப் பிடித்த ஷுப்மன் கில்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக் குழுவில் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசை – 2ஆவது இடத்தில் ராகுல் …!!

ICC ஆண்களுக்கான T20I போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியலை  நேற்று ICC வெளியிட்டதில்பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்திலும் , ராகுல் இரண்டாமிடத்திலும் உள்ளனர். ஐசிசி 20 பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர் ராகுல் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ராகுல் 4 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்த்துள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா 3 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தில் உள்ளார். T-20 தரவரிசையில் முதலிடத்தில் பாகிஸ்தானின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வில்லியம்சனுடன் நேரம் செலவிட்டதை வாழ்வில் மறக்கமுடியாது…!

நியூசிலாந்து அணியை வழிநடத்துவதற்கு வில்லியம்சனே சரியான நபர் என்றும், அவருடன் செலவழித்த நேரங்களை வாழ்வில் எப்போதும் மறக்கமுடியாது எனவும் இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது. ஐந்தாவது டி20 போட்டியின்போது இந்திய கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் போட்டியில் களமிறங்காமல் ஓய்வில் இருந்தனர். இதனால் நியூசிலாந்து பேட்டிங்கின்போது விராட் – வில்லியம்சன் இருவரும் […]

Categories
கால் பந்து விளையாட்டு

இரண்டு கோல் அடித்து ரொனால்டோ அசத்தல்!

ஃபியோரெண்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ அடித்த இரண்டு கோல்கள் உள்பட 3-0 என்ற கணக்கில் ஜுவண்டஸ் அணி வெற்றிபெற்றது. சீரி ஏ லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜுவண்டஸ் அணியை எதிர்த்து ஃபியோரெண்டினா அணி ஆடியது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய ஜுவண்டஸ் அணிக்கு முன்னால், ஃபியோரெண்டினாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனிடையே முதல் பாதியின் ஜுவண்டஸ் அணிக்கு 40ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் நட்சத்திர வீரர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

10 பந்து…. 5 விக்கெட் …. 91_இல் ஆல் அவுட் …. இந்தியாவை பந்தாடியது …!!

ஆஸ்திரேலியா இந்தியா மோதிய மகளிர் T20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சளர்கள் 10 பந்துகளில் 5 விக்கெட் வீழ்த்தி  அசத்தினர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு மகளிர் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. நேற்று நடந்த இதன் மூன்றாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா மோதின. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா படைத்த சாதனைகள்!

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் கேஎல் ராகுல் 45 ரன்கள் விளாசியதையடுத்து, இருதரப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு  எதிராக நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா கேப்டனாகச் செயல்பட்டார். முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 45 ரன்களை […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து: ஜாம்சத்பூரை புரட்டியெடுத்த ஏடிகே!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி 3- 0 என்ற கோல்கணக்கில் ஜாம்சத்பூர் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி, ஜாம்சத்பூர் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏடிகே அணிக்கு ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 02’ஆவது நிமிடத்திலேயே கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார். இதனையடுத்து முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய பந்துவீச்சில் சுருண்ட இந்திய மகளிர் அணி!

முத்தரப்பு மகளிர் டி20 தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், இந்தியாவை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு மகளிர் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இதன் மூன்றாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரேச்சல் ஹேனஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா – ஸ்மிருதி மந்தனா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சதம் விளாசிய விஹாரி.! இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில்..!

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 216 ரன்கள் எடுத்தது. அதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 83 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசி. ஏ அணி 7 விக்கெட்டுகளை இழந்து […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

கிங் இஸ் பேக்… 8 முறை…. ஆஸ்திரேலியன் ஓபனை வென்று ”நோவாக் ஜோகோவிச்” சாதனை …!!

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் டாமினிக் தீமை வீழ்த்தி செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் எட்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 2020ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் செர்பியாவின் நட்சத்திர வீரர் ஜோகோவிச்சை எதிர்த்து ஆஸ்திரியாவின் டாமினிக் தீம் ஆடினார். All to play for 🏆#AO2020 | #AusOpen pic.twitter.com/nSOGEZVI1X — #AusOpen (@AustralianOpen) February […]

Categories
கால் பந்து விளையாட்டு

சரமாரியாகக் கோலடித்து அசத்திய சென்னை: கேரளா அணியை வீழ்த்தி அபாரம்!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நேற்று முன்தினம் லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சி. அணி 6-3 என்ற கோல்கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணிக்கு ரஃபேல் கிரிவெல்லாரோ (rafael crivellaro) ஆட்டத்தின் 39’ஆவது, 45+1’ஆவது நிமிடங்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் மீது இன்னுமா கோபம்? சேவாக்கின் அதிரடி பேச்சு…!

2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் நிகழ்ந்த சம்பவங்களை இன்னும் வீரேந்திர சேவாக் மறக்கவே இல்லை.சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்களான தங்களை தோனி பெஞ்சில் உட்கார வைப்பார் என்று அவர் நிச்சயம் நினைத்து இருக்கவே மாட்டார். ஆனால் அது நடந்து எட்டு ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் சேவாக் அதை நினைவு கூறுகிறார் என்றால் அது அவருடைய மனதில் தீராத வடுவாக இன்றளவும் உள்ளது என்றே நினைக்க தோன்றுகிறது. அப்படி என்னதான் சொன்னார் ஆஸ்திரேலிய தொடரின் போது என்னதான் […]

Categories
மற்றவை விளையாட்டு

‘ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பேன்’ அர்ஜுனா விருது வென்ற சத்யன் ஷேரிங்ஸ்!

இந்திய டேபிள் டென்னிஸ் அணி ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தாலும், நான் பங்கேற்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் தெரிவித்தார். டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஜொலிக்கும் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன். 27 வயதாகும் இவர் உலக டேபிள் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 30ஆவது இடம் வகிக்கிறார். சமீபத்தில் இவர் கிரன்வெட்டர்ஸ்பேச் டிஷ்டென்னிஸ் கிளப் அணிக்காக ஜெர்மன் கோப்பைத் தொடரில் பங்கேற்றார். இந்த கிளப் அணி யாரும் எதிர்பாராத […]

Categories
கிரிக்கெட் சினிமா விளையாட்டு

பிரண்ட்ஷிப் – ஹீரோவாக களமிறங்கும் ஹர்பஜன் சிங்..!!

பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பிரபல இந்திய கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய ஹர்பஜன், தமிழில் ட்வீட் செய்வது, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது என தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார். முன்னதாக சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஹர்பஜன், ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜேபிஆர் – சாம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே ஓவரில் 6, 6, 4, 1, 4nb, 6, 6…. சாதனைப் படைத்த சிவம் தூபே… கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!!

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின்போது, இளம் வீரர் சிவம் தூபே வீசிய 10ஆவது ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையைப் படைத்தார். நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து, 163 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி ஒன்பது ஓவர்களில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின் 10ஆவது ஓவரை வீசுவதற்காக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விரட்டி விரட்டி வெளுத்த இந்தியா…. புதிய உலக சாதனை படைத்தது …!!

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடைசி போட்டியிலும் இந்தியா வென்று இத்தொடரில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி நியூசிலாந்தை அதன் மண்ணில் ஒயிட் வாஷ் செய்தது. நியூசிலாந்து சென்ற வெறு எந்த அணியும் இதுநாள் வரை அந்த அணியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹிட்மேன், பும்ரா அபாரம்…. ஒயிட் வாஷ் ஆனது நியூசிலாந்து …!!

நியூசிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 07 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி இன்று நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். இந்திய அணியில் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் கேப்டனாகச் செயல்படுகிறார். பின்னர் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் – கே.எல். ராகுல் களமிறங்கினர். இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 2 ரன்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : நியூசிலாந்து அணிக்கு 164 இலக்கு ….!!

நியூசிலாந்துக்குகெதிரான 5ஆவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 163 ரன் குவித்து அசத்தியுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி டி20 போட்டி மவுண்ட் மாங்கனுயிலுள்ள பே ஓவல் மைதானத்தில் 12.30க்கு தொடங்கியது. இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோஹித் அணியை வழிநடத்தினார்.   இதில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தூள் கிளப்பிய ஹிட்மேன்….. 60 ரன் அடித்து அசத்தல் …!!

நியூசிலாந்துக்குகெதிரான 5ஆவது போட்டியில் அரைசதமடித்து  ரோஹித் சர்மா அசத்தினார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி டி20 போட்டி மவுண்ட் மாங்கனுயிலுள்ள பே ஓவல் மைதானத்தில் 12.30க்கு தொடங்கியது. இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோஹித் அணியை வழிநடத்தினார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹிட் மேன் மாஸ்… ”அசத்தலான அரைசதம்”…. இந்தியா அதிரடி …!!

நியூசிலாந்துக்குகெதிரான 5ஆவது 20 ஓவர் போட்டியில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி டி20 போட்டி மவுண்ட் மாங்கனுயிலுள்ள பே ஓவல் மைதானத்தில் 12.30க்கு தொடங்கியது. இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோஹித் அணியை வழிநடத்தினார். இதில் டாஸ் வென்ற இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : ராகுல் OUT…. இந்தியா 101/2 ….. 12ஓவர் ….!!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி டி20 போட்டி மவுண்ட் மாங்கனுயிலுள்ள பே ஓவல் மைதானத்தில் 12.30க்கு தொடங்கியது. இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோஹித் அணியை வழிநடத்தினார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் , சஞ்சு […]

Categories
Uncategorized

ராகுல் , ஹிட் மேன் வெறித்தனம்…. இந்தியா அசத்தல் ஆட்டம் …!!

 இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதும் 5ஆம் டி20 போட்டியில் இந்தியா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி டி20 போட்டி மவுண்ட் மாங்கனுயிலுள்ள பே ஓவல் மைதானத்தில் 12.30க்கு தொடங்கியது. இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோஹித் அணியை வழிநடத்தினார். இதில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING; 5ஆவது போட்டியில் இந்திய அணி பேட்டிங்…. !!

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலாம் 5ஆவது டி20 போட்டியில் இந்தியா டாஸ்சை வென்றுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது கடைசி டி20 போட்டியையும் கைப்பற்றி நியூசிலாந்து மண்ணில் வேறெந்த அணியும் செய்யாத சாதனையைப் படைக்க காத்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் வெறு எந்த அணியும் இதுநாள் வரை நியூசிலாந்துக்குச் சென்று, அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து மண்ணில் வரலாற்று சாதனைப் படைக்குமா இந்தியா?

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலாம் ஐந்தாவது டி20 போட்டி இன்று மதியம் 12:30 மணிக்கு மவுண்ட் மாங்கனுயிலுள்ள பே ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது கடைசி டி20 போட்டியையும் கைப்பற்றி நியூசிலாந்து மண்ணில் வேறெந்த அணியும் செய்யாத சாதனையைப் படைக்க காத்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில் வெறு எந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாண்டிங், வார்னே, அக்ரம்… இப்போது பிரையன் லாரா.., கலக்கவிருக்கும் புஷ்ஃபயர் கிரிக்கெட்!

ஆஸ்திரேலியக் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியளிப்பதற்காக நடக்கவிருக்கும் புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் போட்டியில் பிரையன் லாரா களமிறங்கவுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் சார்பாக புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. இதில் பாண்டிங் தலைமையிலான அணியும், வார்னே தலைமையிலான அணியும் ஆடவுள்ளன. இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெய்டன், ஜஸ்டின் லாங்கர், மைக் ஹஸ்ஸி, பிராட் ஹேடின், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஆடம் கில்கிறிஸ்ர், யுவராஜ் சிங், ஷேன் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

#AusOpen : 2ஆவது முறையாக வாகை சூடிய பபூஸ் – கிறிஸ்டினா இணை

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பபூஸ் – கிறிஸ்டினா இணை கைப்பற்றியது. 2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஹங்கேரியின் பபூஸ் – ஃபிரான்ஸின் கிறிஸ்டினா இணையை எதிர்த்து தைவானின் சூ வெய் – செக் குடியரசின் பார்பொரா ஸ்ட்ரிகோவா இணை எதிர்த்து ஆடியது. இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

#AusOpen : இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை எதிர்க்கும் டாமினிக் தீம் …!!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு டாமினிக் தீம் முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில் இளம் வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரவை எதிர்த்து டாமினிக் தீம் ஆடினார். முதல் செட்டின் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ஆடிய ஸ்வெரவ், முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். இதையடுத்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் 6-4 என டாமினிக் தீம் கைப்பற்றி பதிலடி கொடுக்க, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிக் பாஷ் லீக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சிட்னி சிக்சர்ஸ்!

பிக் பாஷ் லீக் தொடரின் குவாலிஃபயர் சுற்றில் வெற்றிபெற்ற சிட்னி சிக்சர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. 2019-20ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் தொடரின் ப்ளே – ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடந்துவருகின்றன. இதன் இரண்டாவது போட்டியான குவாலிஃபயர் போட்டியில் முதலிடம் பிடித்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை எதிர்த்து இரண்டாம் இடம் பிடித்த சிட்னி சிக்சர்ஸ் அணி விளையாடியது. இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் என்பதால், ரசிகர்களிடையே இந்தப் போட்டிக்கு அதீத எதிர்பார்ப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: கடைசி ஓவர் திக்… திக்…. ”சூப்பர் ஓவரில் வெறித்தனம்” இந்தியா மெர்சல் வெற்றி ….!!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில்  டை ஆனதால் சூப்பர் ஓவர் வைக்கப்பட்டு அதில் இந்த அணி வெற்றி பெற்றது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் வெலிங்டனில் நான்காவது டி20 போட்டியில் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே 3-0 என்று தொடரைக் கைப்பற்றியதால், இந்திய அணியில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.இதேபோல் நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக வில்லியம்சன் விலகியதையடுத்து டேரில் மிட்சல் இடம்பெற்றார். இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுதி பந்துவீச்சைத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : சூப்பர் ஓவர் – 14 எடுத்தால் இந்தியா வெற்றி ….!!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில்  டை ஆனதால் சூப்பர் ஓவர் வைக்கப்பட்டு இந்த அணி வெற்றி பெற்றது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் வெலிங்டனில் நான்காவது டி20 போட்டியில் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே 3-0 என்று தொடரைக் கைப்பற்றியதால், இந்திய அணியில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.இதேபோல் நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக வில்லியம்சன் விலகியதையடுத்து டேரில் மிட்சல் இடம்பெற்றார். இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுதி பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி ஓவரில் சிக்சர் அடித்து வெற்றியைத் தேடிதந்த ஹர்மன்ப்ரீத்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடர் அடுத்த மாதம் தொடங்கயிருப்பதால், அதற்கு தயாராகும் விதமாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 மகளிர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியுள்ளது. இதன் முதல் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓப்பனிங் இறங்கிய சஞ்சு… மிடில் ஆர்டரில் நியாயம் சேர்த்த மனீஷ்: நியூசி.க்கு 165 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற 165 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் வெலிங்டனில் நான்காவது டி20 போட்டியில் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே 3-0 என்று தொடரைக் கைப்பற்றியதால், இந்திய அணியில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதேபோல் நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக வில்லியம்சன் விலகியதையடுத்து டேரில் மிட்சல் இடம்பெற்றார். இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுதி பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். பின்னர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

4-ஆவது டி20 போட்டி: ஹிட்மேன் கிடையாது… வெல்லுமா நியூசி… இந்திய அணி பேட்டிங்..!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி 20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆக்லாந்தில் நடந்து முடிந்த இரண்டு டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ஹாமில்ட்டனில் நடந்த 3-ஆவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று வரலாறு […]

Categories
தேசிய செய்திகள்

”பாஜகவில் சாய்னாக்கு பதவி” – தலைவர்கள் கருத்து …!!

சாய்னாவுக்குப் பொருத்தமான பதவியை பாஜக நிச்சயம் வழங்கும் என தெலங்கானா மாநில பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் புதன்கிழமை பாஜகவில் இணைந்தார். இதுகுறித்து தெலங்கானாவில் உள்ள பாஜக பிரமுகர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்துவருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த தெலங்கானா பாஜக தலைவர் கே.லக்ஷ்மன், ‘சாய்னா போன்ற பிரபலங்கள் பாஜகவில் இணைவது மோடி ஆட்சியின் செயல்திறனை குறிக்கிறது’ என்றார். மேலும், பாஜகவின் ஹைதராபாத் பிரிவு தலைவர் என்.ராமசந்தர், ‘சாய்னாவுக்குப் பொருத்தமான பதவியை பாஜக வழங்கும்’ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிக் பாஷ் : ஹோபர்ட் ஹெர்கேன்ஸை வெளியேற்றிய சிட்னி தண்டர்ஸ்!

ஹோபர்ட்: பிக் பாஷ் தொடரின் எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை சிட்னி தண்டர்ஸ் அணி வீழ்த்தியது. பிக் பாஷ் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து, ப்ளே சுற்று ஆட்டங்கள் தொடங்கின. இதன் முதல் ஆட்டமான எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில் நான்காவது இடம் பிடித்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை எதிர்த்து ஐந்தாவது இடம் பிடித்த சிட்னி தண்டர்ஸ் அணி ஆடியது. இதில் டாஸ் வென்ற சிட்னி தண்டர்ஸ் அணி கேப்டன் ஃபெர்குசன் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்த வெற்றியை வில்லியம்சன் பெற்றிருக்க வேண்டும்’ – கோலி

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் திரில் வெற்றிபெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஹாமில்டனில் நடைபெற்றது. சூப்பர் ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று அசத்தியது. போட்டி முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கால்பந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட பாலா தேவி!

இந்தியாவின் நட்சத்திர கால்பந்துவீராங்கனை பாலா தேவி, இந்தியாவை விட்டு வேறொரு அணிக்காக கால்பந்து விளையாடும் முதல் வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர கால்பந்துவீராங்கனையாக வலம்வருபவர் மனிப்பூரைச் சேர்ந்த பாலா தேவி. இந்திய அணியின் அதிக கோல் அடித்த வீராங்கனையாக வலம்வரும் தேவி, தற்போது ஸ்காட்டிஷ் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் ரேஞ்சர்ஸ் கிளப் அணிக்காக 18 மாதங்களுக்கு ஒப்பந்தமாகவுள்ளார். இதன்மூலம் இந்தியா சார்பாக வெளிநாட்டில் நடக்கும் தொடருக்கு ஒப்பந்தமாகவுள்ள முதல் வீராங்கனை என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் ஏலம் பற்றி வாய்திறந்த ஜெய்தேவ் உனாட்கட்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டு மீண்டும் ஏலத்தில் வாங்கப்பட்ட இடக்கை வேகப்பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனாட்கட் முதல்முறையாக ஐபிஎல் ஏலம் பற்றி பேசியுள்ளார். 2018ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்தேவ் உனாட்கட்டை ரூ. 11.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகைக்கேற்ப சரியாக விளையாடாததால், விடுவித்தது. பின்னர் 2019ஆம் ஆண்டு சரியாக ஆடவில்லை என விடுவித்த ராஜஸ்தான் அணியே மீண்டும் உனாட்கட்டை ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த ஆண்டும் சொல்லிக்கொள்ளும்படியாக செயல்படாததால், அணியிலிருந்து ராஜஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#U19CWC : வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய நியூசி.!

யு-19 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் லீக் காலிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி நேரடியாக சூப்பர் லீக் அரையிறுதிக்கு தகுதிபெற்றது. யு-19 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் லீக் காலிறுதிப் போட்டிகள் நடந்துவருகின்றன. இதன் இன்றைய போட்டியில் நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் மெலியஸ் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிர்க் மெக்கென்சி 99 ரன்களும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியப் பந்துவீச்சாளரைத் தாக்கிய யு-19 ஆஸி. வீரர்!

யு-19 உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதியில் இந்தியா பந்துவீச்சாளரை முழங்கையால் தாக்கிய ஆஸி. வீரர் சாமிற்கு ஐசிசி நெகட்டிவ் புள்ளிகளை வழங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டிற்கான ஐசிசி யு-19 உலகக்கோப்பைத் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இதில் சூப்பர் லீக் காலிறுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் 234 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா நிர்ணயித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங்கின்போது 31ஆவது ஓவரை இந்திய பந்துவீச்சாளர் அதர்வா வீசினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”தோனியை காலி செய்த கோலி” சைலண்டாக சேஸ் செய்தார் …!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின்போது, கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி 1126 ரன்கள் எடுத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 1112 ரன்களுடன் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வரலாற்றை மாற்றிய இந்தியா… திக் திக் நிமிடம்… வெறித்தனம் காட்டிய ஹிட்மேன்… சூப்பர் ஓவரில் சூப்பர் வெற்றி..!!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றிபெற்று, முதல்முறையாக தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்தது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்றுள்ள மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே போட்டி….. 48 சிக்சர், 70 பவுண்டரி… உள்ளூர் கிரிக்கெட்டில் சாகசம் …!!

வங்கதேசத்தின் இரண்டாவது டிவிஷனுக்கான உள்ளூர் போட்டியில் இரு அணிகளும் இணைந்து 48 சிக்சர்கள், 70 பவுண்டரிகள் அடித்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. வங்கதேச கிரிக்கெட்டின் உள்ளூர் போட்டிகளில் நார்த் பெங்கால் அணிக்கு எதிராக, டேலண்ட் ஹண்ட் அணி ஆடியது. முதலில் பேட்டிங் ஆடிய நார்த் பெங்கால் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 432 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய டேலண்ட் ஹண்ட் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 386 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரைசதம் விளாசிய ரோஹித்: நியூசி.க்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற 180 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்றுள்ள மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா – கே.எல். ராகுல் இணை களமிறங்கியது. இந்த இணை பவர் ப்ளேயின் முதல் 5 ஓவர்களில் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. சரியான பந்தைத் […]

Categories
தேசிய செய்திகள் பேட்மிண்டன் விளையாட்டு

அக்கா….. தங்கை… ”கொத்தாக தூக்கிய பாஜக” கெத்தாக இணைந்த சாய்னா ….!!

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது தன்கையுடன் பாஜக கட்சியில் இணைந்தார். இன்று காலை முதல் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் முக்கியமான நபர் ஒருவர் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.ஏற்கனவே பாஜகவின் மூத்த தலைவர்கள் இவருடன் தொடர்ச்சியாக ஒரு ஆலோசனை நடத்தினர். அதே நேரத்தில் வருகிற பிப்ரவரியில் டெல்லியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#NZvIND டி20 போட்டி : இந்திய அணி பேட்டிங்… தொடரை கைப்பற்றுமா?…

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆக்லாந்தில் நடந்து முடிந்த இரண்டு டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று  2- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.  இந்த நிலையில் ஹாமில்ட்டனில் உள்ள செடன்பார்க்கில் இன்று பிற்பகல் 12 : 30 மணிக்கு 3-ஆவது டி20 போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வரலாறு படைக்குமா இந்தியா?… 3ஆவது டி20 போட்டி… தொடரை தக்க வைக்குமா நியூசி..!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி-20 போட்டி இன்று பிற்பகல் நடைபெறுகிறது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆக்லாந்தில் நடந்து முடிந்த இரண்டு டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று  2- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நடைபெற்று வருகிறது இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் ஹாமில்ட்டனில் […]

Categories

Tech |