Categories
கிரிக்கெட் விளையாட்டு

323 ரன் இலக்கு…. 4 ரன்னில் விட்ட ஜிம்பாவே…. அட்டகாசமாக போராடியது ….!!

வங்கதேசம் அணிக்கெதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாவே தோல்வியை தழுவியது. வங்கதேசம் – ஜிம்பாவே அணிகளுக்கான ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பாலின் அதிரடியாக ஆடி 158 ரன் குவித்தார். இதனால் வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன் எடுத்து வைத்து இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது. பின்னர் 323 ரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி மகளிர் டி20 தரவரிசை : இந்திய அணியின் இளம்புயல் ஷஃபாலி வர்மா முதலிடம்!

ஐசிசி வெளியிட்ட மகளிர் டி20 தரவரிசையில் இந்திய அணியின் ஷஃபாலி வர்மா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. குரூப் A மற்றும் குரூப் B என்று லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் குரூப் A பிரிவில் இந்திய அணி இடம்பெற்று 4 லீக் போட்டிகளிலும் சிறப்பாக வெற்றி பெற்று முதல் அணியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தடுமாற்றத்தில் கோலி… வெறும் 218 ரன்…. அதிக டிஆர்எஸ் …. மோசமான தேர்வு…. மீண்டு வருவாரா ?

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஐம்பதுக்கும் மேல் சராசரி வைத்துள்ளவர். எத்தகைய பந்துவீச்சாளர்களையும் எதிர்கொண்டு ரன் குவிக்கும் திறமை கொண்டவர். அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சீரான நாடு ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் என கிரிக்கெட் விமர்சகளால் புகழப்படுபவர் விராட் கோலி. ஆனால் நியூசிலாந்து பயணம் அவரது கிரிக்கெட் வாழ்வில் மிக மோசமான பகுதியாக கருதப்படுகிறது. இந்த தொடரில் 20 ஓவர் போட்டி , நாள் போட்டி டெஸ்ட் போட்டி என அனைத்து போட்டிகளிலும் சேர்த்து 218 ரன்கள் மட்டுமே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவை பந்தாடிய நியூசிலாந்து – விராத்கோலி சொதப்பல் …!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி திணறி வருகின்றது. இந்தியா – நியூஸிலாந்து அணிக்களுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகின்றது. முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய இந்தியா அணி  242 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக விஹாரி 55 ரன் எடுத்து அசத்த நியூஸிலாந்து அணியின் ஜேமிசன் 5 விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்ஸ் ஆடிய நியூசிலாந்து  அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

90 ரன்னுக்கு 6 விக்கெட்…. இந்திய அணி தடுமாற்றம் …!!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் இந்தியா தடுமாறி வருகின்றது. இரண்டாவது இன்னிங்சில் 90 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்துள்ளது. நியூசிலாந்து அணியில் ட்ரென்ட் போல்ட் 3 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இந்திய அணி 97 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் மீதமுள்ள நிலையில் நியூஸிலாந்து அணியின் கையே ஓங்கி உள்ளது. பிரித்வி ஷா 14 மாயங் அகர்வால் 3 செதேஷ்வர் புஜாரா 24 விராத் கோலி 14 ரஹானே 9 உமேஷ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியில் ஓர் லேடி சேவாக்…. !!

உலக கோப்பையில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி. தோல்வியை ஜீரணிக்க முடியாமல் கண்ணீர் விட்ட தந்தை. சிறுவயதில் தன்னை பாதித்த இந்த சம்பவத்திற்கு பின்னரே கிரிக்கெட் உலகிகை தனது இலட்சியமாகக் கொள்வார் கனா பட நாயகி. அதற்காக அவர் சந்தித்த தடைகளும், அவமானங்களும் ஏராளம். சினிமாவில் நடந்த இந்த விஷயங்கள் எல்லாம் தற்போது நிஜத்தில் நடந்து வருவது தான் சுவாரசியம். ஷபாலி வர்மா 16 வயதாகும் இவர் , ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

7 அணிகளுக்கு சவால்… மீண்டும் கேப்டனான வார்னர்… கோப்பையை தட்டி தூக்குவோம்..!!

2020 ஐ.பி.எல். தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர், செயல்படுவார் என அந்த அணியின்  நிர்வாகம் அறிவித்துள்ளது. கேப்டனாக மீண்டும் நியமித்தது குறித்து டேவிட் வோர்னர் கூறுகையில், ‘நடப்பு ஐ.பி.எல். தொடரில் கேப்டன் பதவி வழங்கப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் ஒரு முறை அணியை வழிநடத்துவதற்கான வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.கடந்த 2 ஆண்டுகளில் அணியை வழிநடத்திய வில்லியம்சன் மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு நன்றி சொல்ல நான் விரும்புகிறேன். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சூப்பர்மேனாக மாறிய சச்சின்…. நீங்கா இடம் பிடித்துள்ளார் ….!!

கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டியில் முதல் 200 அடிக்கப்பட்ட நாளை நினைவு கூர்ந்து சச்சினை பாராட்டும் வகையில் BCCI வீடியோ பதிவிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஐசிசி வகுக்கும் விதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கூட ஒரு கிரிக்கெட் வீரர் எளிதாக 200 ரன்களை அடிக்க முடியும் என்று மாறிவிட்டது. ஆனால் இதற்கு முன்பு கடந்த கால கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பாக 1990 முதல் 2000 வரை இந்த நிலைமை மிகவும் மாறுபட்டு இருந்தது. சொல்லப்போனால் தனி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தூக்கியெறியப்பட்ட…. ”சச்சின் , கபில்தேவ்”….. கொந்தளிக்கும் ரசிகர்கள் …!!

அகமதாபாத்தில் இருக்கும் மோதேரா கிரிக்கெட் மைதான திறப்பு விழாவுக்கு சச்சின் , கபில்தேவ்வை  அழைக்காதது ரசிகர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகின்ற பிப்ரவரி 24 , 25 என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோதேரா கிரிக்கெட் மைதானத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு” பிரக்யான் ஓஜா அறிவிப்பு …!!

சர்வதேச – முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா அறிவித்துள்ளார். 33 வயதான பிரக்யான் ஓஜா இந்திய அணிக்காக 2012ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். இவர் இந்திய அணியில் 24 டெஸ்ட் போட்டி விளையாடி 113 விக்கெட்டும் , 18 ஒருநாள் போட்டி விளையாடி 21 விக்கெட்டும் , 6 20 ஓவர்கள் போட்டி விளையாடி 10 விக்கெட்டும்  எடுத்துள்ளார். அதே போல 107 முதல்தர போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடர் தோல்வி… கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் பாப் டு பிளெஸிஸ்!!

தென்னாபிரிக்கா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை பாப் டு பிளெஸிஸ் இராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரை சொந்த மண்ணில் இழந்ததால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 3 வகை கிரிக்கெட் போட்டிக்கும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த  பிளெஸிஸ், இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர்கள் உலகக்கோப்பை தொடரில், அணி தோல்வியை சந்தித்ததையடுத்து, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை இராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பங்களாதேஷ் அணி விபரம்… ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் அறிவிப்பு..!!

ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 16பேர் கொண்ட பங்களாதேஷ் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணியில், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து விலகிய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் கவனம் செலுத்தும் நோக்கில், அனுபவ வீரரான மொஹமதுல்லா அணியில் இடம்பெறவில்லை. அதேபோல, இறுதியாக 2017ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய டாஸ்கின் அகமது, மெஹிடி ஹசன் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் அணியில் இடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டி: பிசிசிஐ தகவல்!

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணி தனது முதல் வெளிநாட்டு பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் என பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு டெஸ்ட் போட்டியாக இந்தியா ஆடியது. இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன், ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியுமா என விராட் கோலிக்கு சவால் விடுத்திருந்தார். இதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி, நிச்சயம் உலகின் எந்த மைதானத்திலும் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்திற்கு ரூ. 2 கோடி வழங்கிய பிசிசிஐ!

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி தொடங்கப்பட்ட இந்திய கிரிக்கெட் சங்கத்திற்கு முதல்முறையாக பிசிசிஐ ரூ. 2 கோடியை ஒதுக்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டியின் பரிந்துரைகள்படி இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் தொடங்கப்பட்டு, அதன் நிர்வாகிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த சங்கத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதன் நிர்வாகிகள் தற்காலிக பட்ஜெட்டை தயாரித்து பிசிசிஐக்கு அனுப்பினர். இதனால் பிசிசிஐயிடமிருந்து முதல் தொகையாக ரூ. 5 கோடி வரும் என எதிர்பார்க்கப்பட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 தொடரைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்த இங்கிலாந்து…!!

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிபெற்றதால் இன்று நடந்த மூன்றாவது போட்டிக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் டி20 உலகக்கோப்பை: மழையால் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் ரத்து …!!

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடக்கவிருந்த மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் வரும் பிப்.21ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் இன்றைய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருந்தது. ஆனால் இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பிருந்தே கடும் மழை பெய்ததால், ஆட்டம் டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வரும் 18ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: ஹர்மன்ப்ரீத் கவுர் கடந்து வந்த பாதை!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் கடந்து வந்த பாதைகள் பற்றி பார்க்கலாம். சரவ்தேச அளவில் பார்த்தால் இந்தியாவில் கிரிக்கெட் மதம் தான். ஆனால் அந்த மதம் ஆடவருக்கானது. மகளிர் கிரிக்கெட்டை நேரடியாக ஒளிபரப்புவதற்கே இங்கே ஆயிரம் பிரச்னைகள் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு தெருவிலும் கிரிக்கெட் விளையாடுவதற்கு 100 ஆண்கள் கிடைப்பார்கள். ஆனால் அதே தெருவில் எத்தனை பெண்கள் கிரிக்கெட் ஆடுகிறார்கள் எனப் பார்த்தால், 0.001% தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மைதானத்திற்குள் ‘சிங்கம்’ நுழையபோகும் தேதி தெரியுமா?

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை நேற்று வெளியான நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் பயிற்சியை தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதவுள்ளன. இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி உலகக்கோப்பைத் தொடருக்கு பின் சர்வதேச போட்டிகளில் ஆடாமல் ஓய்வில் உள்ளார். தோனியின் நிலை குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி, அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யுவராஜ் சிங்கின் காதலர் தின பதிவை கலாய்த்த இர்பான் பதான்!

காதலர் தினத்தின்று இன்ஸ்டாகிராமில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் பதிவிற்கு, இர்பான் பதான் கிண்டலாக பதிலளித்துள்ளார். காதலர்தினம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பலரும் தங்களது காதலை சமூக வலைதளப் பக்கங்களில் வெளிப்படுத்தினர். அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், தனது மனைவிதான் என்றும் தனது காதலி என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விரைவில் ஓய்வை அறிவிப்பேன் – சோயப் மாலிக்!

டி20 உலகக் கோப்பை தொடர் நெருங்கும் நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவிப்பேன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் மூத்த வீரராக விளங்குபவர் சோயப் மாலிக். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1999-இல் நடந்த ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 38 வயதான இவர், இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியதால் அணியிலிருந்து நீ்க்கப்பட்டார். இதையடுத்து, சமீபத்தில் நடந்த வங்கதேச […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஏ லீக்: மெல்போர்ன் சிட்டியை வீழ்த்திய வெலிங்டன் ஃபீனிக்ஸ்!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஏ லீ்க் கால்பந்து தொடரில் வெலிங்டன் ஃபீனிக்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் மெல்போர்ன் சிட்டி எஃப்.சி அணியை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவில் நடப்பு சீசனுக்கான ஏ லீக் கால்பந்து தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், ஆஸ்திரேலிய கால்பந்து சம்மேளனத்தின் உரிய அனுமதியை பெற்று நியூசிலாந்தை சேர்ந்த வெலிங்டன் ஃபீனிக்ஸ் அணி பங்கேற்கிறது. இந்நிலையில், இன்று ஆக்லாந்தில் நடைபெற்ற லீக் போட்டியில் மெல்போர்ன் சிட்டி எஃப்.சி – வெலிங்டன் ஃபீனிக்ஸ் அணிகள் மோதின. முதல் பாதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு…..!!

2020ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடப்பட்டுள்ளது.  இந்தியாவில் 2008ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர் இந்தியன் பிரீமியர் லீக். சென்னை , ஹைராபாத் , பெங்களூரு , ராஜஸ்தான் , மும்பை , கொல்கத்தா , பஞ்சாப் , டெல்லி ஆகிய 8 அணிகள் மோதும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 13ஆவது IPL தொடர் அடுத்த மாதம் தொடங்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

1 ரன்னில் தோல்வி; 2 ரன்களில் வெற்றி! இங்கிலாந்து அணியின் கம்பேக்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது. இந்தத் தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய பந்துவீச்சில் 235 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து XI!

இந்திய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து லெவன் அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் தொடருக்கு பின் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. அதற்கு முன்னதாக நியூசிலாந்து லெவன் அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிவருகிறது. இதில், நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ஐந்தாவது பெண் குழந்தை’ – மகிழ்ச்சியில் அப்ரிடி.!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு, ஐந்தாவது முறையாக மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர், ஷாகித் அப்ரிடி. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கிய இவர் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என 500க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் களமிறங்கி 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும், 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். நடியா என்ற பெண்ணை மணந்து கொண்ட அப்ரிடிக்கு, அக்ஷா, அன்சா, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

புலியின் புகைப்படத்தை வெளியிட்ட சிஎஸ்கே சிங்கம்!

மத்திய பிரேசத்தில் உள்ள புலிகள் காப்பகத்திற்குச் சென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, புலி உறுமும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்த தோனி, இந்திய அணிக்காக களமிறங்கி 6 மாதங்கள் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துவருகிறார். பலரும் தோனியின் எதிர்காலம் குறித்து பலவிதமான கருத்துகளை தெரிவித்துவந்தாலும், அவர் தனது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்சிபி லோகோ… தீம் மியூசிக்குடன் விளக்கமளித்த விராட் கோலி!

ஆர்சிபி அணியின் புதிய லோகோவிற்கு அந்த அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக புதிய தசாப்தத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட கோலோ நேற்று வெளியிடப்பட்டது. இது ஆர்சிபி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே புதிய லோகோ குறித்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்களித்துள்ளார். அதில், ” புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள லோகோவுடன் களமிறங்குவதற்கு ஆவலாக இருக்கிறோம். இந்த லோகோ நமது வீரர்களின் சவால் நிறைந்த ஆட்டத்தை குறிக்கும் வகையில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

புனித பீட்டர்ஸ்பெர்க் டிராபி: காலிறுதிக்கு முன்னேறிய கிகி பெர்டன்ஸ்!

புனித பீட்டர்ஸ்பெர்க் டிராபிக்கான மகளிர் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்று நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்ட்னஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிருக்கான புனித பீட்டர்ஸ்பெர்க் டிராபிக்கான டென்னிஸ் தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது சுற்றில் தரவரிசைப் பட்டியலில் எட்டாம் இடத்திலிருக்கும் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸை எதிர்த்து ரஷ்யாவின் வெரோனிகா ஆடினார். இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய கிகி பெர்டன்ஸ் ஆட்டத்திற்கு பதிலளிக்க முடியாமல் ரஷ்ய வீராங்கனை வெரோனிகா திணறினார். இதனால் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ரோட்டர்டாம் ஓபன்: அரையிறுதியில் ரோகன் போபண்ணா ஜோடி!

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டேனிஸ் ஷப்போவலோவ் இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நெதர்லாந்தில் இந்த ஆண்டுக்கான ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டேனிஸ் ஷப்போவலோவ் இணை, நெதர்லாந்தின் ஜீன் ரோஜர், ரொமேனியாவின் ஹொரியா டெக்கு இணையுடன் மோதியது. முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்தி 6-2 என்ற கணக்கில் லாவகமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கால்பந்து: சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற கேரளா….!!

இந்தியன் மகளிர் லீக் தொடரின் இறுதி போட்டியில் கோகுலம் கேரள அணி 3-2 என்ற கோல் கணக்கில் கிரிப்சா எஃப்சி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆடவர்களுக்கு நடத்தப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பாணியில், மகளிருக்கான கால்பந்து தொடர் இந்திய மகளிர் கால்பந்து லீக் என்ற பெயரில் 2017ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்த தொடரின் நான்காவது சீசனின் இறுதி போட்டியில் கோகுலம் கேரளா – மனிப்பூரின் கிரிப்சா எஃப்சி […]

Categories
கால் பந்து தேசிய செய்திகள் விளையாட்டு

ஜீரோ டிகிரியில் கார்னர் கிக் கோல் அடித்த கேரள சிறுவன்… வைரல் வீடியோ!

கேரளாவில் நடந்த சிறுவர்களுக்கான போட்டி ஒன்றில் 10 வயது சிறுவன் பூஜ்ஜிய டிகிரில் டைரெக்ட்டாக கார்னர் கிக்கில் கோல் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கால்பந்து போட்டிகளில் கார்னர் கிக்கிலிருந்து டைரெக்கடாக கோல் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. நேர்த்தியான கோணத்தில் பந்தை அடித்தால் மட்டுமே அதுபோன்ற கோல் அடிக்க முடியும். அப்படி கோல் அடிப்பதற்கு ஜீரோ டிகிரி கோல் என்று பெயர். இந்த ஜீரோ டிகிரி கோல் அடித்த வீர்ரகளை விரல் விட்டு எண்ணிடலாம். ஜாம்பவான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”என் முதல் காதல்” வீடியோ பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர்!

உலகம் முழுவதும் காதலர் தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் காதல் குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். உலகம் முழுவதும் காதலர் தினத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் காதல் குறித்த பார்வைகள் வேறுபடும். ஒரு சிலருக்கு தாங்கள் வளர்க்கும் நாய் மேல் காதல், ஒரு சிலருக்கு தங்களின் வேலையின் மேல் காதல், ஒரு சிலருக்கு இணை, ஒரு சிலருக்கு மட்டுமே கிரிக்கெட். இந்தியாவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2020: ஆர்சிபி அணிக்கு புதிய மாற்றமாவது கைகொடுக்குமா?

ஐபிஎல் தொடரின் முக்கிய அணியாக வலம்வரும் ஆர்சிபி அணி தங்கள் அணியின் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக அணியில் ஏதெனும் மாற்றத்தைச் செய்வது வழக்கம். இதனிடையே நேற்று ஆர்சிபி அணியின் நிர்வாகம் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகளில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் என்று மாற்றம் செய்ததோடு, முகப்பு […]

Categories
கால் பந்து விளையாட்டு

மகளிர் ஏ டிவிஷன் கால்பந்து லீக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை!

அர்ஜென்டினாவின் மகளிருக்கான ஏ டிவிஷன் கால்பந்து லீக் தொடரில் பங்கேற்பதற்கு திருநங்கை மாரா கோம்ஸிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது கால்பந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. கால்பந்து மீது அதிகமான ஈடுபாடு கொண்ட நாடு என்றால் அது அர்ஜென்டினாதான். ஆனால் அந்த நாட்டிற்கு மற்றொரு அடையாளமும் இருக்கிறது. மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை காப்பதில் அர்ஜென்டினாவுக்கு நிகர் அர்ஜென்டினாதான். 2010ஆம் ஆண்டிலேயே தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களுக்கு திருமணத்தை அங்கீகரித்தது, தனது பால் அடையாளத்தை மாற்றுவதற்கு அதீத கட்டுப்படுகளும் இல்லாமல் சரியான சுதந்திரத்தை வழங்கியது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள் விளையாட்டு

முதலமைச்சர் கோப்பை: ஆன்லைன் விண்ணப்பங்களால் விளையாட்டு வீரர்கள் தவிப்பு..!

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்த ஆண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்ததால், விளையாட்டுப் போட்டிகளில் குறைந்த அளவிலேயே வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் 25 வயதுக்குட்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

லாகூர் தாக்குதலால் நாங்கள் யார் என்பதைப் புரிந்துகொண்டோம் : சங்கக்காரா!

கிரிக்கெட்டர்கள் மீதான லாகூர் தாக்குதல் சம்பவம் பற்றி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள எம்சிசி அணியின் கேப்டன் சங்கக்காரா பேசியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை அணி 2009ஆம் ஆண்டு கடாஃபி மைதானம் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென யாரும் எதிர்பாராத வகையில் தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 7 பேர் காயமடைந்தனர். மேலும் பொதுமக்களில் 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள எந்த சர்வதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மிக சிறந்த கேப்டன்….. இந்திய அணி தொடர் வெற்றி….. எல்லா புகழும் தோனிக்கே…. ரெய்னா புகழாரம்…..!!

இந்தியாவின் தலை சிறந்த கேப்டன் எப்போதுமே மகேந்திர சிங் தோனி தான் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனத்தின் சூப்பர் கிங்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ்ரெய்னா செய்தியாளர் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார். அதில் இந்திய கிரிக்கெட் அணியில் எதையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் மகேந்திர சிங் தோனி. அதே போல், எங்களிடமும் அதே தன்னம்பிக்கையை கொண்டு வந்தவர். தற்போது அணியில்  அவர் இல்லாத பட்சத்திலும், அவருடைய வழிகாட்டுதலின் […]

Categories
சேலம் விளையாட்டு

முதலமைச்சர் கோப்பை: 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் 1200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. 25 வயதுக்குட்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம் என்பதால், இது விளையாட்டு வீரர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திற்கான விளையாட்டு போட்டிகள் இன்றும் நாளையும் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சின் சாதனையை முறியடித்து, சச்சினிடமே வாழ்த்து பெற்ற வீராங்கனை!

 16 வயதேயாகும் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா சச்சினை சந்தித்து வாழ்த்துப்பெற்றுள்ள சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்களாக இருந்தாலும், கிரிக்கெட் வீரர், வீராங்கனையாக இருந்தாலும் சிறுவயதில் அனைவருமே சச்சினைப் பார்த்துதான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியிருப்போம். ஆனால் அந்த கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக களமிறங்கி சச்சினின் சாதனையை முறியடிப்போம் என்று யாரும் எண்ணியிருக்க மாட்டோம். ஆனால் சச்சின் தீவிர ரசிகையான இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா அந்த சாதனையைப் படைத்து, அவரிடமே வாழ்த்துப்பெற்ற சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

புனித பீட்டர்ஸ்பெர்க் டிராபி: காலிறுதிக்கு முன்னேறிய பெலிண்டா பென்சிக்

புனித பீட்டர்ஸ்பெர்க் டிராபிக்கான டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ஸ்வெட்லனாவை வீழ்த்தி பெலிண்டா பென்சிக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மகளிருக்கான புனித பீட்டர்ஸ்பெர்க் டிராபிக்கான டென்னிஸ் தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது சுற்றில் சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக்கை எதிர்த்து ரஷ்யாவின் ஸ்வெட்லனா ஆடினார். இதன் முதல் சுற்றில் இரு வீராங்கனைகளும் சரிக்கு சமமாக ஆடியதால் ஆட்டம் டை – ப்ரேக்கர் வரை சென்றது. டை ப்ரேக்கரை 7-4 என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாலைப் பாதுகாப்பு டி20 தொடர்: சச்சினுடன் மோதவுள்ள லாரா!

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக நடைபெறவுள்ள உலக டி20 தொடரின் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய அணி, லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்தியாவில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், சாலை பாதுகாப்பு விழப்புணர்வுக்காக உலக டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய ஐந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சீட் எட்ஜ் த்ரில்லராக சென்ற ஆட்டம்.. 1 ரன்னில் இங்கிலாந்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் தொடர்களைத் தொடர்ந்து டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயன் மோர்கன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டி காக் – பவுமா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தோனியோடு என்னை ஒப்பிடுவது சரியானதல்ல’ – வங்கதேச கேப்டன் அக்பர்

தன்னை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியோடு ஒப்பிடுவது சரியானதாக இருக்காது என யு19 உலகக்கோப்பையை வென்ற வங்கதேச கேப்டன் அக்பர் அலி தெரிவித்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்துக் கோப்பையைக் கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் வெற்றிபெறுவதற்கு வங்கதேச அணியின் முதன்மை மற்றும் முக்கியக் காரணமாக வங்கதேச கேப்டன் அக்பர் அலி இருந்தார். ஒருமுனையில் இருந்துகொண்டு முகத்தில் எவ்வித சலனமுமின்றி வலிமையான இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலைச் சமாளித்து […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஏ.எஃப்.சி. கோப்பை: அதிரடியாக ஆடி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு எஃப்.சி.

ஏ.எஃப்.சி. கோப்பை பரோ அணியை 9-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு எஃப்.சி. அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பாக கிளப் அணிகளுக்கு இடையே நடத்தப்படும் ஏ.எஃப்.சி. கோப்பைத் தொடர் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கியது. இதன் நேற்றைய போட்டியில் இந்தியாவின் பெங்களூரு எஃப்.சி. அணி, பூடானின் பரோ அணியை எதிர்கொண்டது. இந்த இரு அணிகளுக்கு இடையே முன்னதாக நடந்த ஆட்டத்தில் பெங்களுரூ எஃப்.சி. அணி 1-0 என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முகமது ஹஃபீஸுக்கான தடையை விலக்கியது ஐசிசி

பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரர் முகமது ஹஃபீஸ் பந்துவீசுவதற்கு விதிக்கப்பட்ட தடையை தற்போது ஐசிசி விலக்கியது. 2019ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த விடாலிட்டி பிளாஸ்ட் (vitality Blast) தொடரின்போது கள நடுவர்களால் பாகிஸ்தான் வீரர் முகமது ஹஃபீஸ் பந்துவீசும் விதம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு, அவருடைய பந்துவீச்சை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பரிசோதனை செய்தது. அதில் முகமது ஹஃபீஸின் முழங்கை அனுமதிக்கப்பட்ட எல்லையைக் கடந்து 15 டிகிரி விலகிச் செல்வதால், அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சம்மந்தப்பட்ட போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உடல்தகுதியை நிரூபிப்பாரா இஷாந்த் ஷர்மா? – எதிர்நோக்கும் இந்திய டீம்

காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் இஷாந்த் ஷர்மா, அவருடைய உடல்தகுதியை தேசிய கிரிக்கெட் அகாடமியில் நிரூபிக்க அழைக்கப்பட்டுள்ளார். டெல்லி – விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி போட்டியில் ஆடியபோது இஷாந்த் ஷர்மாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனை ஸ்கேன் செய்தபோது, காயம் தீவிரமாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக காயத்திலிருந்து மீண்டுள்ள இஷாந்த் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் நியூசிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பையை மகளிர் அணி கைப்பற்றினால் புதிய வரலாறு படைக்கும்!

டி20 உலகக்கோப்பையை மகளிர் அணி கைப்பற்றினால், 1983ஆம் ஆண்டு கபில் தேவ் இந்திய கிரிக்கெட்டில் ஏற்படுத்திய மாற்றாத்தை இந்திய மகளிர் அணி மீண்டும் ஏற்படுத்தும் என மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராமன் தெரிவித்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டிற்கான டி20 உலகக்கோப்பைத் தொடர்தான் அடுத்ததாக ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எப்போதும் போல் அல்லாமல் இந்த ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை மீது அனைத்துத் தரப்பினரின் கண்களும்படத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பைக்கான இந்திய மகளிர் அணியில் முழுக்க முழுக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணியின் இயக்குநரானார் ராபின் சிங்

ஐக்கிர அரபு அமீரக கிரிக்கெட் அணியின் புதிய இயக்குநராக இந்திய வீரர் ராபின் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் சில மாதங்களுக்கு முன்னதாக அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த டக்கி பிரவுனை நீக்கியது. அவர் 2017ஆம் ஆண்டிலிருந்து அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார். திடீரென பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது ஐக்கிய அமீரக அணியின் புதிய இயக்குநராக முன்னாள் இந்திய வீரர் ராபின் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஹாங்காங், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் சரிந்த பும்ரா …!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் ஏமாற்றம் அடைந்த பும்ரா,  ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை, நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் மூன்று போட்டிகளிலும் பும்ரா 30 ஓவர்கள் வீசினார். இதில் ஒரு ஓவரை மட்டுமே மெய்டனாக வீசினார். 167 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மிரட்டல் ஃபார்மில் இருக்கும் சர்ஃப்ராஸ் கான்!

மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் மும்பை வீரர் சர்ஃப்ராஸ் கான் 169 ரன்கள் அடித்து, இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். நடப்பு சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடரின் குரூப் பிரிவு ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், குரூப் ஏ, பி, பிரிவுக்கான ஒன்பதாவது சுற்று ஆட்டத்தில் மும்பை அணி, மத்தியப் பிரதேச அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய […]

Categories

Tech |