இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது வாக்கினை பதிவு செய்தார். ஹர்பஜன் சிங்கின் சொந்த மாநிலம் பஞ்சாப். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர். இவர் தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் மக்களவை தேர்தலின் இறுதி கட்ட தேர்தலில் 8 மாநிலங்களுக்கு இன்று வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றான பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று […]
