Categories
டென்னிஸ் விளையாட்டு

உலக டென்னிஸ் தரவரிசை…. மீண்டும் முதலிடத்தில் ரபேல் நடால்.!!

ஸ்பெயினைச் சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால், உலக டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு நேற்று டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடால் 9 ஆயிரத்து 585 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் இருந்த அவர் செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை பின்னுக்குத் தள்ளியுள்ளார். உலக தரவரிசையில் நடால் முதலிடம் பிடிப்பது இது எட்டாவது முறையாகும். இந்த தரவரிசையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பிசிசிஐக்கு சிறந்த தேர்வாளர்கள் தேவை”… அதிரடி காட்டிய யுவராஜ்..!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை தேர்வு செய்ய வேறு நல்ல தேர்வாளர்கள் தேவை என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின் வெளிநாட்டு டி20 தொடர்களில் மட்டும் அவர் பங்கேற்றுவருகிறார். இந்த சூழலில் நேற்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வது என்பது அவ்வளவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவோம்… இனி சொல்லவே வேண்டாம்… ஐபிஎல்லில் புது ரூல்.!!

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக பிசிசிஐ மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் டி20 தொடரானது கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டி20 போட்டிகளில் ஐபிஎல் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். காரணம் பிசிசிஐயால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தொடரில் உலகின் பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொள்கின்றனர். இதனால் இந்த ஐபிஎல் போட்டி வருடந்தோறும் ஒரு திருவிழாவைப் போன்றே கொண்டாடப்படுகிறது. இதனிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் கிரிக்கெட்டிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஆம்லா…..!!

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க வீரரான ஹாசிம் ஆம்லா கேப் டவுன் பிளிட்ஸ் அணியின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரைப்போலவே, தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஸான்சி சூப்பர் லிக் எனப்படும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் கேப் டவுன் பிளிட்ஸ் அணி கடந்த சீசனில் இரண்டாமிடம் பிடித்திருந்தது.தற்போது கேப் டவுன் பிளிட்ஸ் அணி இந்த சீசனுக்கான அணியின் ஆலோசகராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி தொடக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலியின் பத்தாண்டு சாதனையை காலி செய்த கில்….!!

தியோதர் டிராபியில் இந்தியா சி கேப்டனாக இருக்கும் சுப்மன் கில், உள்நாட்டுத் தொடரின் இறுதிப் போட்டியில் விராட் கோலியின் 10 வருட சாதனையை முறியடித்துள்ளார். இந்தியாவில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் தொடரான தியோதர் கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பர்தீவ் பட்டேல் தலைமையிலான இந்தியா பி ஆணி, சுப்மன் கில் தலைமையிலான இந்தியா சி அணியை எதிர்கொண்டது.இதன் மூலம் சுப்மன் கில் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜாதவ், நதீம் அதிரடியில் கோப்பையை கைப்பற்றியது இந்தியா பி….!!

தியோதர் கோப்பை ஒருநாள் தொடரில் இந்தியா பி அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சி அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. இந்தியாவில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் தொடரான தியோதர் கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா பி ஆணி, இந்தியா சி அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய இந்தியா பி அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”வரலாற்றை மாற்றி எழுதிய வங்கதேசம்” இந்திய அணியுடன் முதல் வெற்றி….!!

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் வங்கதேசம் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய முதலாவது டி20 போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே கேப்டன் ரோஹித் சர்மாவின்(9) விக்கெட்டை இழந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மழை ஆடிய ஆட்டத்தால் கைவிடப்பட்ட பாகிஸ்தான் – ஆஸி. ஆட்டம்…!!

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி, மழையால் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஃபின்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் – ஃபக்கர் சமான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டம் தொடங்கி வீசப்பட்ட இரண்டாவது பந்திலேயே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்தை பழி தீர்த்த நியூசி…!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி கப்தில், கிராண்ட்ஹோம், நீஷம் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் காலடி எடுத்து வைத்த ஆஷ்லி பார்ட்டி…!!

உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி, செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவாவை வீழ்த்தி முதல்முறையாக டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் டென்னிஸ் தொடருக்கு தகுதிபெற்றுள்ளார். டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவின் சென்ஷைன் நகரில் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டியை எதிர்த்து செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவா ஆடினார்.இதன் முதல் செட் ஆட்டத்தில் கரோலினா அதிரடியாக ஆட இதனை எதிர்பார்த்திராத ஆஷ்லி […]

Categories
கால் பந்து விளையாட்டு

7 நிமிடத்தில் மெஸ்ஸி அணியை போட்டுத் தள்ளிய லெவாண்டே…!!

லா லிகா கால்பந்து தொடரின் பார்சிலோனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் லெவாண்டே அணியிடம் தோல்வியடைந்தது. லா லிகா கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மெஸ்ஸியின் பார்சிலோனா அணியை எதிர்த்து லெவாண்டே அணி மோதியது. இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நட்சத்திர அணியான பார்சிலோனா களத்தில் தீவிர ஆக்ரோஷத்துடன் செயல்பட்டது. = முதல் பாதியின்போது பார்சிலோனா அணியின் ஆர்தர், நெல்சன், சமீடோ ஆகியோர் மெஸ்ஸிக்கு பந்தை பாஸ் செய்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும், சாதனைப் படைத்த ரோஹித்…!!

இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒன்பது ரன்களில் வெளியேறினார். இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி, கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோஹித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டி20: ஷகிப் இல்லாமல் இந்தியாவுக்கு ஈடுகொடுக்குமா வங்கதேசம்?

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. தீபாவளி பண்டிகையின்போது வெடித்த பட்டாசுகளால் டெல்லியில் வசித்துவரும் பொதுமக்கள் முகமூடியுடன் அலைந்து திரிந்துவரும் வேளையில், இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.இந்தியாவுக்கு பயணம் வருவதற்கு முன்னதாக வங்கதேச வீரர்கள் போராட்டம், அதைத்தொடர்ந்து ஷகிப் அல் ஹசனுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் தடை என வங்கதேச அணி நிர்வாகத்திடையே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனையெல்லாம் சமாளித்து இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”வங்கதேசத்தால் அனைவரையும் எளிதில் வெல்ல முடியும்” ரோஹித் சர்மா கருத்து …!!

உலகின் தலைசிறந்த அணிகளையும் வெல்லக்கூடிய அணியாக வங்கதேச கிரிக்கெட் அணி முன்னேறியுள்ளது என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியா – வங்கதேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதனிடையே நேற்றைய பயிற்சிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “டி20 போட்டிகளைப் பொறுத்தவரையில் எதிரணிக்கு எதிராக நமது அணியின் யுக்தி, திட்டம் மற்றும் நமது அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெறும் 3 வினாடி தான்….. ”பதிலளித்த விராட் கோலி” – கங்குலி

பகல் – இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியை பங்கேற்க வைப்பதற்காக விராட் கோலியிடம் பேசியபோது, அவர் மூன்றே விநாடிகளில் பதில் கூறியதாக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரான சவுரவ் கங்குலி கடந்த 24ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். அந்தச் சந்திப்பு குறித்து தற்போது கங்குலி மனம் திறந்துள்ளார்.அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரு மனுஷன் இப்படியா விளையாடுறது… பேட்டால் இலங்கையை போட்டுப் பொளந்த வார்னர்…!!

ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 தொடரின் கடைசி போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை முழுமையாக கைப்பற்றியது. இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் முதலிரண்டு போட்டியிலும் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியது. இதனிடையே இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இரு அணிகளும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் […]

Categories
மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி விழா: ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை …!!

முத்துராமலிங்க தேவரின் 112ஆவது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வரும் 30ஆம் தேதி காலை 9 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இறுதிச்சுற்றில் போராடி தோல்வியைத் தழுவிய இந்திய இணை….!!

பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி தோல்வியடைந்து இரண்டாமிடம் பிடித்தனர். பிரான்ஸின் பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த ஜோடி இன்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் இந்தோனேஷியாவின் மார்கஸ் […]

Categories
மற்றவை விளையாட்டு

#RWC2019: மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தென் ஆப்பிரிக்கா!

உலகக்கோப்பை ரக்பி தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 19-16 என்ற புள்ளிக்கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஜப்பானில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ரக்பி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் நான்கு பிரிவுகளில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. இதில் குரூப் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப்போட்டிகளின் முடிவில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து, இங்கிலாந்து, வேல்ஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் இலங்கை வீரரின் மோசமான சாதனை…..!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் கசுன் ரஜித்தா மோசமான சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலிய சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதனிடையே இன்று அடிலெய்டில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை சிதைத்தனர். ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் 64, மேக்ஸ்வெல் 62, வார்னர் 100 […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீட்புப் பணி தொய்வின்றி நடக்கிறது…. முதல்வர் அடிக்கடி கேட்டறிகிறார் – விஜயபாஸ்கர்

சுர்ஜித் மீட்புப்பணி குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 42 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 தீயணைப்பு வீரர்கள் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கண்ணீரோடு வாழ்த்துகின்றேன் , கைதட்டுகின்றேன் – வைரமுத்து ட்வீட் ….!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டுமென்று கவிஞ்சர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 43 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 […]

Categories
திருச்சி தேசிய செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தம்பி நீ வா…! அப்ப தான் உண்மையான தீபாவளி…. எழுந்து வா தங்கமே – ஹர்பஜன் ட்வீட்

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டுமென்று ஹர்பஜன் சிங்க் ட்வீட் செய்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 41 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ரோஜர் ஃபெடரரின் ஆக்ரோஷத்தில் வீழ்ந்த சிட்சிபாஸ்…!!

சுவிஸ் இன்டோர்ஸ் பேஸல் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸை வீழ்த்தி நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார். சுவிஸ் இன்டோர்ஸ் பேஸல் தொடர் சுவிட்சர்லாந்தின் பேஸல் (Basel) நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி போட்டியில் உள்ளூர் வீரரான ரோஜர் ஃபெடரரை எதிர்த்து கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ஆடினார்.இதற்கு முன்னதாக நடந்த ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை இளம் வீரர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து: சொந்த மண்ணில் ஒடிசாவை காலி செய்த நார்த் ஈஸ்ட் யுனைடெட்

ஐ.எஸ்.எல். கால்பந்து ஆறாவது சீசனின் இன்றைய லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி. அணி ஒடிசா எஃப்.சி. அணியை வீழ்த்தியது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் நடைபெற்றுவருகிறது. இந்த சீசனின் ஏழாவது லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி. – ஒடிசா எஃப்.சி. அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இது இரண்டாவது போட்டியாகும். முன்னதாக பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் நார்த் ஈஸ்ட் அணி டிராவும், ஜம்ஷெட்பூர் அணியிடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பகல் – இரவு டெஸ்ட் போட்டிக்கு தயார் – விராட்!

இந்திய அணி பகல்- இரவு டெஸ்ட் போட்டிக்கு தயார் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்து வரும் நிலையில், டெஸ்ட் போட்டிகளை பார்க்க நேரம் இல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐசிசி டெஸ்ட் போட்டிகளை ஒருநாள் போட்டிகள் போல் பகல் – இரவு போட்டிகளாக நடத்த முடிவு செய்து சில போட்டிகளை நடத்தியது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ள நிலையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கிரிக்கெட் வாரிய விதி மீறில்” சிக்கிக்கொண்ட ஷாகிப்-அல்-ஹாசன்…!!

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான ஷாகிப்-அல்-ஹாசன் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதற்காக விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. வங்கதேச டெஸ்ட், டி20 அணிகளின் கேப்டனாக இருப்பவர் ஷாகிப் அல் ஹாசன். உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ஷாகிப், சமீபத்தில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் 11 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கூறி சில வீரர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் அவர்களின் கோரிக்கையை ஏற்றபின் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தச் சூழலில் அக்டோபர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கங்குலியைப் புகழ்ந்துதள்ளிய ரவி சாஸ்திரி….!!

பிசிசிஐயின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட்டது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயின் 39ஆவது தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி கங்குலி அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்தச் சூழலில் கங்குலியின் நியமனம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் பிரபல ஆங்கில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான்காவது இடத்திற்கு மணீஷ் பாண்டேதான் சரி…!

இந்திய அணியின் நான்காவது இடத்தின் தேடல் பல ஆண்டுகளாக முடிவு பெறாமல் இருந்துவரும் நிலையில், அந்த இடத்திற்கு விஜய் ஹசாரே தொடரில் நடுவரிசையில் களமிறங்கி சிறப்பாக ஆடிய மணீஷ் பாண்டே சரியாக இருப்பார் என ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இந்திய அணியில் பல ஆண்டாக நான்காவது இடத்தில் மியூசிக்கல் சேர் ஆடிவரும் நிலையில், அந்த இடத்தை மணீஷ் பாண்டே நிச்சயம் நிரப்புவார் என இந்திய அணி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கண்ணான கண்ணே….! தோனி_க்கு மசாஜ் செய்யும் ஸிவா” வைரலாகும் வீடியோ …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மகள் ஸிவாவுடன் ரிலாக்ஸ் செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி எப்போது அணிக்குத் திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரணம் உலகக்கோப்பைத் தொடருக்குப்பின் ஓய்வை அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தோனி அது குறித்து மவுனம் காத்துவருகிறார்.அது மட்டுமல்லாது அதன்பின் ராணுவத்தில் 15 நாள்கள் பயிற்சி எடுத்து திரும்பிய தோனி தனக்கு டிசம்பர் மாதம்வரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#AUSvSL: மாற்று வீரராக அணியில் இடம் பிடித்த சர்ச்சை பந்துவீச்சாளர்!

ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் ஆண்ட்ரூ டைக்கு பதிலாக அந்த அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியானது நாளை ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இத்தொடருக்கான பயிற்சி ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை முழங்காலில் காயமடைந்தார்.இதன் காரணமாக இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 அணியில் இடம்பெற்றிருந்த அவர் இந்த இரு தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்தும் […]

Categories
கால் பந்து விளையாட்டு

நியூசிலாந்தின் உலகக்கோப்பை கனவை மீண்டும் தகர்த்த இங்கிலாந்து….!!

உலகக்கோப்பை ரக்பி தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஜப்பானில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ரக்பி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் நான்கு பிரிவுகளில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. இதில் குரூப் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப்போட்டிகளின் முடிவில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து, இங்கிலாந்து, வேல்ஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

”காலிறுதியுடன் திரும்பிய உலக சாம்பியன்” ரசிகர்கள் அதிர்ச்சி …!!

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியைத் தழுவினார். ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தத் தொடரில் மகளில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தைவானின் தை சூ யிங்கை எதிர்கொண்டார்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிந்து முதல் செட் கணக்கை 21-16 என்ற கணக்கில் […]

Categories
கால் பந்து விளையாட்டு

#ENGvNZL : என்னது..! இதுலயும் பவுண்டரி கணக்கா? #RWC2019 …!!

உலகக்கோப்பை ரக்பி தொடரின் முதலாவது அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஜப்பானில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ரக்பி தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப்போட்டியில் நடப்புச் சாம்பியனான நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இத்தொடரில் இதுவரை நியூசிலாந்து அணி இந்தாண்டு உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து அணி மூன்று போட்டியில் வெற்றியையும் நடைபெறாத ஒரு போட்டியில் சம புள்ளிகளையும் பெற்றது. போட்டிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#NZvsENG2019: காயம் காரணமாக நட்சத்திர வீரர் விலகல்- ரசிகர்கள் சோகம்…!!

நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியுள்ளது. இவ்விரு அணிகளுக்கான முதலாவது டி20 போட்டி நவம்பர் 1ஆம் தேதி நியூசிலாந்திலுள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறுகிறது.இதனிடையே நியூசிலாந்து அணியின் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான கேன் வில்லியம்சன் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியுடனான தொடரிலிருந்து விலகியுள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T10 LEAGUE : களமிறங்குகிறார் சிக்ஸர் மன்னன் யுவராஜ்..!!

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் டி10 கிரிக்கெட் தொடரில் களமிறங்கவுள்ளார். அபுதாபியில் நடத்தப்படும் டி10 லீக் கிரிக்கெட் தொடர் நவம்பர் 14 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டிகளில் 10 ஓவர்கள் மட்டுமே வீசப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் பல முன்னாள் வீரர்களும் களமிறங்குகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வை அறிவித்த இந்திய அணியின் அதிரடி மன்னரான யுவராஜ் சிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN T20I தொடர்… தூக்கி எறியப்பட்ட கோலி…. தலைமை தாங்கும் ஹிட் மேன்..!!

வங்கதேச அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது   வங்கதேச அணி வருகின்ற நவம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடவுள்ளது. இப்போட்டிகளுக்கான மைதானங்கள், தேதிகள் அடங்கிய அட்டவணை சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (BCCI) வங்கதேச அணிக்கு எதிரான  3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்தது. வங்கதேசத்துக்கு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் இந்திய அணியை வழிநடத்தியது போல் ஊழலின்றி வழிநடத்துவேன் – கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியது போன்று பிசிசிஐ-யும் ஊழல் இல்லாமல் வழிநடத்துவேன் என்று புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சவுரங் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதனிடையே சவுரவ் கங்குலி பிசிசிஐயின் 39ஆவது தலைவராக இன்று பதவியேற்றார். இதன்மூலம் 65 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ஒருவர் பிசிசிஐயின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது. […]

Categories
கால் பந்து விளையாட்டு

சென்னையின் எஃப்சிக்கு எதிரான போட்டி – முதல் பாதியில் எஃப்சி கோவா முன்னிலை ….!!

ஐஎஸ்எல் கால்பந்து ஆறாவது சீசனில் சென்னையின் எஃப்சி – எஃப்சி கோவா ஆகிய அணிகளுக்கிடையேயான ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐஎஸ்எல் கால்பந்து ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் இன்று நடைபெற்றுவரும் நான்காவது போட்டியில் சென்னையின் எஃப்சி – எஃப்சி கோவா அணிகள் மோதின. கடந்த சீசனில் இரண்டாவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#GraemeSmith49 – முன்னாள் கேப்டனுக்கு கிடைத்த கௌரவம் …!!

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மிதிற்கு கௌரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்தை வழங்கி மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்(எம்சிசி) கௌரவித்து. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கிரேம் ஸ்மித் எம்சிசியின் கௌரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்துக்கு தேர்வாகியுள்ளார்.இதுகுறித்து எம்சிசி தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட்டில் அவர் செய்த சாதனைகளுக்காக தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித்திற்கு எம்சிசியின் கௌரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்த்தை வழங்குகிறோம் என்று பதிவிட்டுள்ளது. யார் இந்த கிரேம் ஸ்மித்: தென் […]

Categories
கதைகள் கால் பந்து விளையாட்டு

”மகன் கால்பந்தாட காரை விற்ற தந்தை” கனவை எட்டிப்பிடித்த கால்பந்து வீரனின் கதை…!!

இங்கிலாந்தில் பிறந்து நைஜீரிய அணிக்காக கால்பந்து ஆடும் ஓலா ஐனாவின் கதை. ”செல்சீ கிளப் அணியின் பயிற்சியில் பங்குபெற காரில் பயணம் செய்துகொண்டிருந்தோம். திடீரென கார் பழுதானது. எவ்வளவோ முயன்றும் சரி செய்ய முடியவில்லை. சரியான நேரத்திற்கு அங்கு செல்ல வேண்டும். காரை அந்த இடத்திலேயே என் அப்பா வேறொருவரிடம் விற்றுவிட்டு, என்னை ரயிலில் ஏற்றினார். அவரும் என்னுடன் வந்தார். ஏனென்றால் அதற்கு முன்பாக நான் ரயிலில் தனியாக பயணித்தது இல்லை. எனது பயிற்சியில் அனைத்து நேரங்களிலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvsBAN…. போட்டியை காண ரூ 50 மட்டுமே… ரசிகர்களை ஈர்க்க ஈடன் கார்டன் அறிவிப்பு ..!!

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலை 50 ரூபாயாக குறைப்பதாக ஈடன் கார்டன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணி 3 டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இப்போட்டிகளுக்கான மைதானங்கள், தேதிகள் அடங்கிய அட்டவணை சமீபத்தில் வெளியாகியது.இதில் இவ்விரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியானது கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இப்போட்டியை காண வங்கதேச பிரதமரான ஷேக் ஹசினா நேரில் […]

Categories
கபடி விளையாட்டு

இந்திய கபடி அணி சாம்பியன்…. ட்வீட்_டால் நோஸ்-கட் செய்த சேவாக் ….!!

உலகக்கோப்பையில் இந்திய கபடி அணி 8ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை முன்னாள் கிரிக்கெட் சேவாக்கின்  அசத்தல் ட்வீட் செய்துள்ளார். இந்தியாவில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கபடி போட்டியில் 8_ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. அசத்தல் வெற்றி பெற்ற இந்திய கபடி அணியை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இதுவரை நடைபெற்ற எட்டு உலகக்கோப்பை கபடித் தொடரின் சாம்பியனும் இந்திய அணிதான். இப்போட்டியின் மற்றொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் சேவாக்கின் ட்வீட்தான். 2016இல் இந்திய வீரர் சேவாக்கும் இங்கிலாந்தின் […]

Categories
கபடி விளையாட்டு

அசத்திய இந்திய அணி…. ”8_ஆவது முறையாக உலக சாம்பியன்” கபடியில் ஆதிக்கம்…!!

உலகக்கோப்பை கபடி போட்டியில் இந்தியா 8ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இந்திய அணி எட்டாவது முறையாக கபடி உலகக்கோப்பை வென்று இன்றோடு மூன்றாண்டு நிறைவடைந்தது. கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டின் உலகக்கோப்பை வெல்லும் சாம்பியன் அணிகளின் பெயர்கள் மாறலாம். ஆனால், உலகக்கோப்பை கபடிப் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணிதான் அன்றும் இன்றும் சாம்பியனாகத் திகழ்கிறது. அந்தவகையில், இந்த நாள் (அக்டோபர் 22) இந்திய கபடி ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள். 2016ஆம் ஆண்டில் உலகக்கோப்பை கபடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஞ்சி மைதானத்துக்கு ராணுவ ஜீப்பில் வந்த தோனி….!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது புதிய காரில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்ற ராஞ்சி மைதானத்திற்கு வந்திருந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். உலகக்கோப்பை தொடருக்குப்பின் ராணுவப் பயிற்சி, சிறிய ஓய்வு என இந்திய அணியில் இருந்து விலகியிருக்கும் தோனி, அவரது சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியைக் […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் டெக்னாலஜி விளையாட்டு

தோனி, சச்சின் மிகவும் ஆபத்தான பிரபலங்கள்….!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆகியோரது பெயர்கள் மிகவும் ஆபத்தான பிரபலங்களின் பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் உபயோகித்துவருகின்றனர். இதனால் அவர்கள் அதிகமான நேரங்களில் இணையத்திலேயே தங்கள் பொழுதையும் கழிக்கின்றனர். அதிலும் சில வலைதளங்களில் தங்களுக்குப் பிடித்த பிரபலங்களின் நிகழ்ச்சிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் பார்க்கவும் செய்கின்றனர்.இப்படியான நிகழ்ச்சிகளை காண்பதற்கு ஒரு சில நிறுவனங்கள் கட்டணங்கள் விதிக்கின்றன. ஆனால் கட்டணம் செலுத்தாமல் இந்த நிகழ்வுகளை இலவசமாக பார்க்க […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: 2ஆவது சுற்றில் நுழைந்த இந்திய வீரர்….!!

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தோனேசிய வீரர் டாமி சுகியார்டோவை வீழ்த்தியதன் மூலம் இந்திய வீரர் சுபான்கர் டே அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று பாரிசில் தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் சுபான்கர் டே (54ஆவது ரேங்க்), இந்தோனேசிய வீரர் டாமி சுகியார்டோ (19ஆவது ரேங்க்) ஆகியோர் மோதினர். இதில் சுபான்கர் முதல் செட்டை 15 – 21 என்ற கணக்கில் […]

Categories
மற்றவை விளையாட்டு

ஏன் வெளியேற்றினீர்கள் ? 11 வயது சிறுவன் தந்தை விளக்கம் கேட்டு கடிதம்…!!

பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் கார்த்திக் எனும் 11 வயது சிறுவன் பாதியில் வெளியேற்றப்பட்டதற்கு அவனது தந்தை விளக்கம் அளிக்குமாறு அனைத்து இந்திய செஸ் கூட்டமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. திருநெல்வேலி மாவட்ட செஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 10, 13, 15 வயது எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் ஆண், பெண் குழந்தைகள் பங்கேற்றனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: ஸ்காட்லாந்தைப் பந்தாடிய நமிபியா….!!

 கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று 19ஆவது ஆட்டத்தில் நமிபியா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. T20WorldCup: அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் துபாயில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் நமிபியா அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற நமிபியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நமிபியா அணியின் தொடக்க வீரர் ஸ்டீபன் பார்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்”…. கோலின் முன்ரோ சாதனையை சமன் செய்த அயர்லாந்து வீரர்.!!

சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக சிக்சர்களை அடித்த நியூசிலாந்து வீரர் கோலின் முன்ரோவின் உலகச் சாதனையை அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரெய்ன் சமன்செய்துள்ளார். டி20 உலகக்கோப்பை அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. ஏற்கனவே தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த அணிகள் நேரடியாக இந்தத் தொடரில் விளையாட தகுதிப் பெற்றன. இந்த நிலையில், மீதமிருக்கும் ஆறு அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் தற்போது […]

Categories

Tech |