Categories
கிரிக்கெட் விளையாட்டு

11 வயதில் பானிபூரி பாய்… 17 வயதில் ரூ. 2.4 கோடிக்கு ஏலம் – தந்தை பெருமிதம்..!!

தனது மகனின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தந்தை பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் நுழைந்து விளையாட வேண்டும் என்பதே கிரிக்கெட்டை நேசிக்கும் இளைஞர்களின் கனவாக இருக்கும். அதற்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடர் திறவுகோலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திறமையான இளம் வீரர்கள் இனங்காணப்பட்டு, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்கிறது ஐபிஎல் தொடர். இந்நிலையில், 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்களை ஏலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் ஏலத்தில் கவனம் ஈர்த்த தமிழ்நாட்டு வீரர்கள்..!!

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 12ஆவது ஐபிஎல் சீசன், ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 13-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் மூன்று பேர் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். வீரர்களின் விவரம்: கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழ்நாடு சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை, இந்த முறை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து விலகிய மற்றொரு வீரர்..!!

தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் டெம்பா பவுமா, காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார். இந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி இத்தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டிருந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி பயப்பட தேவையில்லை”… யார் சொன்னது… கிறிஸ் லின்னை மிரட்டிய பும்ரா..!!

அடுத்த ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிறிஸ் லின் பதிவிட்ட ட்வீட்டிற்கு மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா கிண்டலாகப் பதிலளித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று கொல்கத்தாவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதல் வீரராக ஏலத்தில் விடப்பட்ட கிறிஸ் லின்னை, அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. இவர் கடந்த சீசன்களில் கொல்கத்தா அணியில் விளையாடியவர் ஆவார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பவுலிங்கை வலுப்படுத்த… 3 வீரர்களை போட்டி போட்டு வாங்கிய CSK..!!

I P L-  2020 ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹாசில்வுட் உட்பட மூன்று முக்கிய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில்  வாங்கியுள்ளது .  ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2008-ஆம்  ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இந்தியாவில்   நடத்தப்பட்டு வருகிறது. 13-வது I P L போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே  மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின்  ஏலம் கொல்கத்தாவில் மாலை 3.30 மணிக்கு தொடங்கி  நடைபெற்றது . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன் ஆன கே.எல். ராகுல்..!! உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரான கே எல் ராகுல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக  நியமிக்கப்பட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிக்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளிட்ட 8 அணிகள் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்க நெஸ்  வாடியா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். அவர் கூறுகையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“திறமைக்கு வயது தடையில்லை” 48 வயதை கடந்த வீரரை வாங்கிய கொல்கத்தா அணி…!! 

கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 48 வயது நிரம்பிய பிரவின் தாம்பேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.  2008 ஆம் ஆண்டு T 20 கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல். தொடங்கப்பட்டது. வருகின்ற 2020-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 13 ஆவது ஐ.பி.எல். போட்டி நடைப்பெறவுள்ளது. இந்த போட்டிக்கான ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. இந்த ஏலம் தொடங்கிய நேரத்தில் இருந்தே அணிகளின் உரிமையாளர்கள் போட்டிப்போட்டு வீரர்களை தன் வசப்படுத்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பியூஸ் சாவ்லாவுக்கு ரூ. 6,75,00,000…!! போட்டி போட்டு வாங்கிய CSK…!!

கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பியூஸ் சாவ்லாவை 6.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 2008 ஆம் ஆண்டு T 20 கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல். தொடங்கப்பட்டது. வருகின்ற 2020-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 13 ஆவது ஐ.பி.எல். போட்டி நடைப்பெறவுள்ளது. இந்த போட்டிக்கான ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. இந்த ஏலம் தொடங்கிய நேரத்தில் இருந்தே அணிகளின் உரிமையாளர்கள் போட்டிப்போட்டு வீரர்களை தன் வசப்படுத்தி கொண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொல்கத்தாவில் ஐ .பி.எல். ஏலம்… தமிழக வீரருக்கு 4,00,00,000….!!!

ஐ.பி.எல். ஏலத்தில் கொல்கத்தா அணி தமிழக வீரரும், சுழல்பந்து வீச்சாளருமான வருண் சக்ரவர்த்தியை 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.   2008 ஆம் ஆண்டு T 20 கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல். தொடங்கப்பட்டது. வருகின்ற 2020-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 13 ஆவது ஐ.பி.எல். போட்டி நடைப்பெறவுள்ளது. இந்த போட்டிக்கான ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. இந்த ஏலம் தொடங்கிய நேரத்தில் இருந்தே அணிகளின் உரிமையாளர்கள் போட்டிப்போட்டு வீரர்களை தன் வசப்படுத்தி கொண்டு வருகின்றனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்..!!

ரஞ்சி கோப்பை தொடரின் நட்சத்திர வீரராக வலம் வந்த வாஷிம் ஜாஃபர், கிங்ஸ் லேவன் பஞ்சாப் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நடத்தபடும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் வாஷிம் ஜாஃபர். இவர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 ஆயிரம் ரன்களை அடித்து, இத்தொடரில் அதிகபட்ச ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தவர். மேலும் ரஞ்சி கோப்பை கிரிக்கெத் தொடரில் 150 போட்டிகளில் விளையாடி, […]

Categories
மற்றவை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் விளையாட்டு

புதிய விளையாட்டு குறித்த முதல் நாள் பயிற்சி இன்று தொடக்கம்!

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புதிய விளையாட்டு குறித்த சிறப்பு மூன்று நாள் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் புதிய விளையாட்டுகளாக கேரம், ஜிம்னாஸ்டிக், தேக்வாண்டோ, கடல் கூடைப்பந்து, சதுரங்கம், உள்ளிட்ட 12 விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதற்கான புதிய விதிமுறைகள் குறித்து பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி மூன்று மாவட்டங்களை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இன்று ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதான வளாகத்திலுள்ள, கேரம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹிட்மேன், ராகுல் வெறியாட்டம்… நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ… தொடரை சமன் செய்த இந்தியா..!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா   107 ரன்கள் வித்தியாசத்தில் அபார  வெற்றி பெற்றது.  இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் உள்ள ACA -VDCA  அரங்கத்தில் நேற்று மதியம் 1: 30 மணிக்கு நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற  வெஸ்ட் இண்டீஸ் அணி  முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரரான ஹிட்மேன் ஷர்மா மற்றும் கே.ல்.ராகுல் களம் இறங்கினர். […]

Categories
கிரிக்கெட் சென்னை மாவட்ட செய்திகள் விளையாட்டு

பொல்லார்டை தகாத வார்த்தையால் திட்டிய ஹிட்மேன்!

சென்னை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்போது இந்திய வீரர் ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டை தகாத வார்த்தையால் தீட்டிய வீடியோ இணையதளத்தில் வைரலாகியது. சென்னை சேப்பாம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரசியல் பழி விளையாட்டு…. ஜாமியா மாணவர்களுக்கு குரல்கொடுக்கும் பதான்..!!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், டெல்லியில் நடைபெற்றுவரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான தாக்குதல் குறித்து கவலை தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் காரணமாக நாடு முழுவதும் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் அச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியிலுள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்ற டெல்லி காவல் துறையினர், மாணவர்களிடையே போராட்டத்தை கைவிடும்படி கூறியுள்ளனர். ஆனால் அதனை ஏற்காமல் போராட்டத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னா அடி… மரண அடி அடித்த ஹெட்மயர், ஹோப்… இந்தியாவை ஊதி தள்ளிய வெஸ்ட் இண்டீஸ்..!!

ஹெட்மயர் மற்றும் ஹோப் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி  வென்றது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்றது . டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்அணி  பவுலிங்கை  தேர்வு செய்தது.இந்த போட்டியில்  இந்திய அணியில் ஷிவம் டுபே அறிமுகம் ஆனார். K.L.ராகுல் மற்றும்  ரோகித் ஷர்மா  இருவரும் இந்திய அணியின்  தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.அதில்  லோகேஷ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தேடப்பட்ட ரசிகர் கண்டுபிடிப்பு..!! மகழ்ச்சியில் சச்சின்…!!

கிரிக்கெட்டின்  கடவுளாக ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் தனக்கு ஆலோசனை வழங்கிய சென்னை ஊழியரை தேடி வந்த நிலையில் தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.  சென்னையில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான ஒரு போட்டி நடைபெற்ற போது, சென்னை நட்சத்திர விடுதி தாஜ் கோரமண்டல் நிறுவன ஊழியர் ஒருவர் கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு சில அறிவுரைகளை கூறி இருக்கிறார். அந்த அறிவுரை சச்சினுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. ஆனால் அந்த ஊழியர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல். ஏலத்தில் இருந்து விலகினார் சாம்பில்லிங்ஸ்..!!!

 சென்னை சூப்பர் கிங்ஸ்காக  விளையாடிய சாம்பில்லிங்ஸ்,I P L ஏலத்தில் இருந்து விலகியுள்ளார்.     வரும் டிசம்பர் 19-ஆம்தேதி அன்று முதல் முறையாக கொல்கத்தாவில்   I P L -2020 புதிய  சீசனுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்னதாகவே 71 வீரா்கள்  ஒவ்வொரு  அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளன .35 வெளிநாட்டு வீரர்கள்  உள்பட 127 பேரை அணிகள்  தக்க வைத்துள்ளன.I P L ஏலத்தில் மொத்தம் 332 வீரர்கள் கலந்து  கொள்வார்கள்  என்று அறிவிக்கப்பட்டது. I P […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணி வீரர்களை புகழ்ந்து பேசிய பயிற்சியாளர்..!!

இந்திய அணியின் வீரர்கள்  குறித்து பரத் அருண் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் அளித்த பேட்டியில், ஒவ்வொரு போட்டியிலும் ஷிவம் துபே   நம்பிக்கை  அளித்து வருகிறார். மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு  எதிராக கடைசி  T 20 போட்டியில்  முதல் ஒவரிலே  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு  ரன்களை வாரிக்கொடுத்தார்,பின்னர் சூழ்நிலைகேற்ப  ஏற்பட்டும் சரிவை சமாளித்து அற்புதமாக பந்து வீசினார். அதனால்  ஷிவம் துபே  மீது அதிக நம்பிக்கை  வைத்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலி போல் கடுமையாக உழையுங்கள்… வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் அறிவுரை..!!!

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி போல வெஸ்ட்இண்டீஸ்  அணி வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ரோட்டி எஸ்ட்விக் அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ்  அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களை  கொண்ட ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தில் உள்ள M.A.சிதம்பரம் அரங்கத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை  அன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடை பெறுகிறது . முதல் போட்டி நாளை நடக்க இருப்பதால்  இரு அணி வீரர்களும் நேற்று முன்தினம் சென்னை […]

Categories
விளையாட்டு

சென்னை ஊழியரை தேடும் சச்சின் டெண்டுல்கர்…..உங்களால் முடிந்தால் அவருக்கு உதவி செய்யுங்கள்…..!!!!!

கிரிக்கெட்டின்  கடவுளாக ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் சென்னை ஊழியரை தேடி வருகிறார். அவரை கண்டுபிடிக்க கோரிக்கையும் விடுத்துள்ளார்.  சென்னையில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான ஒரு போட்டி நடைபெற்ற போது, சென்னை நட்சத்திர விடுதி தாஜ் கோரமண்டல் நிறுவன ஊழியர் ஒருவர் கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு சில அறிவுரைகளை கூறி இருக்கிறார். அந்த அறிவுரை சச்சினுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. ஆனால் அந்த ஊழியர் யார் என்று சச்சினுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvsWI ஒருநாள் போட்டி: வெளியேறிய புவி..உள்ளே வந்த சர்துல் தாகூர்…!!

இந்திய அணியில் புவனேஷ்குமாருக்கு பதிலாக சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள்  போட்டி தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் புவனேஷ்குமாருக்கு பதிலாக சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடர்கள் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.இப்போட்டிக்காக அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.   இந்நிலையில், புவனேஷ்குமாருக்கு வலதுபக்க இடுப்பு பகுதியில் வலி இருப்பதாக ஸ்கேன் பரிசோதனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் அணிக்காக T20-யில் களம் இறங்கிய பிராவோ..!!!

T20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வீரராக கருதப்படும் டுவெயின்  பிராவோ மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவமிக்க  வேகப்பந்து வீச்சாளரான டுவெயின் பிராவோ அந்த அணியின்  சிறந்த ஆல்-ரவுண்டராக  திகழ்கிறார் .தன்னுடைய துல்லியமான பந்து வீச்சினால் எதிரே உள்ள பேட்ஸ்மேனை  மிரட்டுவதால் T 20கிரிக்கெட்டில்   டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார் .ஆனால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் ஏற்பட்ட சில  மோதல் காரணமாக  அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெறித்தனமாக ஆடிய கிங் கோலி…T20 தரவரிசையில் முன்னேற்றம்…!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிங் கோலி சர்வதேச  T 20 பேட்ஸ்மேன்  தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறியுள்ளார்.  இந்திய  அணியின் கேப்டனான  விராட் கோலி 3- வகை கிரிக்கெட் போட்டியிலும் பேட்ஸ்மேன்   தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறியுள்ளார் . சமீப  காலமாக ICC  டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கபட்டது.அதனால் T 20 பேட்டிங்க் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வெளியே  தள்ளப்பட்டார். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்ன சொல்லுறீங்க….. இப்பதான் தொடங்குறீங்களா ? கலக்க போகும் கிரிக்கெட் ஜாம்பவான்…!!

கிரிக்கெட் உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்த ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் இன்று முதன் முறையாக சமூக வளைதளங்களில் இணைந்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு இரண்டு உலகக்கோப்பை பெற்றுத்தந்தவரும் உலக கிரிக்கெட்டின் ஜாம்பவானுமாக வலம்வந்தவர் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக கிட்டத்தட்ட 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். 2012ஆம் ஆண்டு அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்த இவர், மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணிக்காக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் இரட்டை சதம் : தடைகளை வென்று சரித்திரம் படைக்கும் பிரித்வி ஷா…!!

பரோடா அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டி மூலம், மும்பையைச் சேர்ந்த இந்திய வீரர் முதல் தரப் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இந்தியாவில் முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிரிக்கெட் தற்போது பல்வேறு நகரங்களில் பல்வேறு பிரிவுகளாக நடைபெற்று வருகிறது. இதில், எலைட் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை – பரோடா அணிகளுக்கு இடையிலான போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

400 சிக்சர்களை விளாசி ரோஹித் புதிய சாதனை!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் தனது 400ஆவது சிக்சரை விளாசி அசத்தினார். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது, கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, இன்னிங்ஸில் காட்ரோல் வீசிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிக போட்டிகளில் களநடுவர்…! – சாதனை படைக்கவுள்ள பாகிஸ்தானியர்!

பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் தார், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக டெஸ்ட் போட்டிகளில் களநடுவராகப் பணியாற்றியவர் என்ற சாதனையைப் படைக்கவுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பெர்த்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு களநடுவராகப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அலீம் தார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் அவர் பங்கேற்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தனது 129ஆவது டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மூன்றாவது டி20: தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”இவுங்க தான் அடுத்த கேப்டன்” அடித்துச் சொல்லும் கில்லி ….!!

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அல்லது பாட் கம்மின்ஸ் தான் வரவேண்டும் என முன்னாள் விக்கெட் கீப்பிங் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக வலம் வருபவர் டிம் பெய்ன். இவர் சில தினங்களுக்கு முன்பு அடுத்த ஆண்டு கோடை காலத்துடன் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்று விடுவேன் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் விக்கெட் கீப்பிங் ஜாம்பவானுமான ஆடம் கில்கிறிஸ்ட், ஆஸ்திரேலிய அணியின் அடுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பொல்லார்ட் புத்திசாலித்தனமான வீரர்… புகழ்ந்த ரோஹித் சர்மா..!!

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா, பொல்லார்ட்டை புத்திசாலித்தனமான வீரர் என்று புகழ்ந்து கூறினார். இன்று இரவு 7 மணிக்கு   இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி T 20 போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது.  இரண்டு  அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளன. ஹதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா  வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணியை வீழ்த்தியது. இதனால் இன்றைய போட்டியை வென்று  மகுடம் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆண்டின் சிறந்த தடகள வீராங்கனை விருதைப்பெற்ற கனடா டென்னிஸ் வீராங்கனை!

யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற கனடாவின் பியான்கா ஆண்ட்ரியாசு, அந்நாட்டின் இந்த ஆண்டிற்கான சிறந்த தடகள வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார். கனடா நாட்டில் ஆண்டுதோறும் ஆண்டின் சிறந்த தடகள வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்குவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்தாண்டிற்கான சிறந்த தடகள வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகள் இன்று வழங்கப்பட்டன. இதில் ஆச்சரியமூட்டும் விதத்தில், யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியனும் கனடா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மொதல்ல இத ஜெயிப்போம், அப்புறம் அத பத்திலாம் யோசிக்கலாம் – ரோஹித் சர்மா!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி குறித்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடையே கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது டி20 தொடரில் விளையாடிவருகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றிபெற்றுள்ளன. இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நாளை மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”4ஆம் இடத்திற்கு இந்தப் பையன்தான் செட் ஆவான்’’ – இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்….!!

இந்தியாவின் நான்காம் இடத்துக்கும் எந்த வீரர் சரியாக இருப்பார் என்பது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் மிகப்பெரும் பிரச்னை நான்காம் இடத்தில் யாரை களமிறக்குவது என்பதுதான். இதற்காக இந்திய அணி மனீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அம்பத்தி ராயுடு, விஜய் சங்கர், கே.எல். ராகுல், ரிஷப் பந்த் என பல வீரர்களை சோதனை செய்தது. ஆனால் இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ட்விட்டரிலும் தோனியை விட்டுவைக்காத விராட் கோலி…..!!

ட்விட்டரில் அதிக ரசிகர்களைக் கவர்ந்த இந்த ஆண்டிற்கான விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தையும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ட்விட்டர் பக்கத்தில் அதிக ரசிகர்களை ஈர்த்த பிரபலங்களில் பதிவுகள் கொண்ட பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுவருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் இந்தியாவின் விளையாட்டு வீரர் வீராங்கனைகளினால் அதிக ரசிகர்களை ஈர்க்கப்பட்ட பட்டியலை ட்விட்டர் இந்தியா இன்று வெளியிட்டுள்ளது. அந்தவகையில் ஆண்கள் பட்டியலில் இந்திய […]

Categories
கால் பந்து விளையாட்டு

நூலிழையில் பறிபோன சென்னை அணியின் வெற்றி!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியும் ஜாம்சத்பூர் அணியும் மோதிய ஆட்டம் சமனில் முடிவடைந்தது. ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி, ஜாம்சத்பூர் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக தொடங்கிய இந்திய ஆட்டத்தின் 26’ ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் நெரிஜுஸ் கோலடித்து அசத்தினார். இதன் மூலம் சென்னையின் எஃப்சி அணி முதல் […]

Categories
விளையாட்டு

தெற்காசிய விளையாட்டு போட்டி: பதக்கப் பட்டியலில் இந்தியா ஆதிக்கம்…!!

நேபாளத்தில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகளின் ஒன்பதாம் நாளான நேற்று இந்திய 27 தங்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான 13ஆவது விளையாட்டுத் தொடர் தற்போது நேபாள் தலைநகர் காத்மண்டு, போக்ரா ஆகிய நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், பூடான் மற்றும் மாலத்தீவு என எட்டு நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் தெற்காசிய விளையாட்டு போட்டியின் ஒன்பதாம் நாளில் இந்திய அணி 27 தங்கப் பதக்கங்களையும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாஹலுக்கு விருந்து உறுதி – ரோஹித் சர்மா….!!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா, சக அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹலுக்கு இடையே நடைபெற்ற உரையாடல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது டி20 தொடரில் விளையாடிவருகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்த இரண்டாவது டி20 போட்டிக்கு பின், இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா, பந்துவீச்சாளர்கள் யுஸ்வேந்திர […]

Categories
கால் பந்து விளையாட்டு

பூமா நிறுவனத்துடன் ஒப்பந்தமான இந்திய அணி கேப்டன்…!!

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் விளையாட்டுப் பொருள்கள் உற்பத்தி நிறுவனமான பூமா (PUMA) நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளார். உலக கால்பந்து விளையாட்டில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளவரும் தற்போதைய இந்திய கால்பந்து அணியின் கேப்டனுமாக இருப்பவருமான சுனில் சேத்ரி, தற்போது விளையாட்டுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான பூமா நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் தன்னை இணைத்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், பூமா நிறுவனத்துடன் […]

Categories
கபடி விளையாட்டு

கிரிக்கெட்டை தொடர்ந்து கபடியிலும் மாஸ் காட்ட காத்திருக்கும் தமிழ்நாடு!

வருகிற 2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டில், தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் லீக் தொடரை நடத்தவிருப்பதாகத் தமிழ்நாடு கபடி விளையாட்டு சங்கம் தெரிவித்துள்ளது. புரோ கபடி போட்டிகளைப் போலவே உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் வருகிற 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் போட்டிகளை நடத்த, தமிழ்நாடு கபடி சங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கூட்டம் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு கபடி சங்கத்தின் தலைவர் முத்துசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு – நடுங்கிய வீரர்கள்….!!

ஆந்திரா – விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்திற்குள் நுழைந்த பாம்பினால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இந்தியாவில் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டுத் தொடரான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளான இன்று தொடங்கிய முதல் சுற்று ஆட்டத்தில் ஆந்திர பிரதேச அணி, விதர்பா அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற விதர்பா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் அணியில் இடம்பெறும் கேரி கிர்ஸ்டன் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரின்போது தென் ஆப்பிரிக்க அணியின் ஆலோசகராகப் பணியாற்ற முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் விருப்பம் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வூட், அதிரடி பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரஞ்சி கோப்பை: படிக்கல் நிதான ஆட்டம்….. வலுவான நிலையில் கர்நாடகா …!!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, கர்நாடக அணியை எதிர்கொண்டு விளையாடிவருகிறது. இந்தியாவில் நடைபெற்றுவரும் பரம்பரியமிக்க கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் தொடக்க நாளான இன்று குரூப் ஏ, பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி, கர்நாடக அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற கர்நாடக அணியின் கேப்டன் கருண் நாயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

‘பிராவோவுடன் பணிபுரிந்தது ஸ்பெஷல் அனுபவம்… நடனக் கலைஞர் பெருமிதம்..!!

‘த சமியா சாங்’ எனப்படும் பாடலுக்கு கிரிக்கெட் வீரர் பிரவோவுக்கும், சக்தி மோகனுக்கும் ராகுல் ஷெட்டி என்னும் நடனக் கலைஞர் நடனமாட பயிற்சியளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய நடனக் கலைஞர் ராகுல் ஷெட்டி, பிராவோவுடன் பணிபுரிந்தது சிறப்பான அனுபவம் என்றார். இதைத்தொடர்ந்து ‘ஒரு சர்வதேச பிரபலமான வில் ஸ்மித்துக்குப் பிறகு பிராவோவுடன் பணிபுரிகிறேன். ஒரு பாடகர் என அறியும் முன்னரே, பிராவோவை கிரிக்கெட் வீரராக நான் ரசித்துள்ளேன். இதற்காக பணிபுரிவதில் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன்’ என ராகுல் […]

Categories
உலக செய்திகள் விளையாட்டு

டி.20கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி …!!

இந்தியாவிற்கு எதிரான 2வது டி 20கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி 8விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.   திருவனந்தபுரத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7விக்கெட் இழப்பிற்கு 170ரன் களை எடுத்தது அதிகபட்சமாக சிபம் துபே 84ரன்களையும் ரிசப்பத்தேன் 34ரன்களையும் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவு அணி தொடக்க வீரர்கள் சீரான வேகத்தில் ரன்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I தரவரிசை : “தொடர்ந்து பாகிஸ்தான் முதலிடம்”…. இந்தியாவுக்கு 5 -ஆம் இடம்..!!

ICC கடந்த டிசம்பர் 02_ஆம் தேதி வெளியிட்ட T20I போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து முதலிடம் வகித்து அசத்துகின்றது. ♥  பாகிஸ்தான்                         ⇒        புள்ளி  270       ♦      தரவரிசை : 1 ♥  ஆஸ்திரேலியா                 ⇒         புள்ளி  269   […]

Categories
விளையாட்டு

இன்னும் நாலே வருடங்களில் பெண்களுக்கான ஐ.பி.எல் போட்டி..!!

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவ்ரவ் கங்குலி வெளியிட்ட அறிக்கையில். சிறந்த வீராங்கனைகளை உடைய ஏழு அணிகளை கொண்ட ஐ .பி .எல் போட்டி நடத்தலாம் என அறிவித்துள்ளார் .  மகளிருக்கான  ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என நீண்ட நாட்களாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது . கடந்த வருடம்  ஐ.பி.எல். போட்டிக்கு முன்னதாக பல நாட்டு வீராங்கனைகள் பங்குபெற்ற  இருபது  ஓவர் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இந்நிலையில்  மகளிருக்கான  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பற்றி  இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

4 ஆண்டுகளில் பெண்களுக்கான ஐ.பி.எல்….-கங்குலி

அடுத்து வரும் 4 ஆண்டுகளில்  திறமையான வீராங்கனைகளை கொண்ட  7 அணிகள் கொண்டு  ஐ.பி.எல். தொடரை நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.   மகளிருக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறன்து. கடந்த வருடம் ஐ.பி.எல். போட்டிக்கு முன்னராக பல நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்ட  20 ஓவர் கண்காட்சி போட்டி நடைபெற்ற நிலையில் மகளிருக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரிஷப் பண்ட், தோனியாக மாற 15 வருடம் ஆகும் – கங்குலி..!!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடருக்குப்பின் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்துவருகிறார். இந்திய அணியின் ஒப்பற்ற விக்கெட் கீப்பரான தோனியின் ஓய்வுக்குப்பின் அந்த இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருபுறம் தோனியின் ஓய்வு எப்போது என பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில், அவரது இடத்தை நிரப்புவதற்காக இளம் விக்கெட் கீப்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றியுடன் கணக்கை தொடங்குமா இந்தியா?

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 10 மாதம் மட்டுமே உள்ள நிலையில், இதற்குத் தயாராகும் வகையிலேயே தற்போது இந்திய அணி தங்களைப் பலப்படுத்திவருகிறது. அந்தவகையில், இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஸ்மித்துடனான ரேஸில் முந்திய கோலி?! ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்ஸ் வெளியிடூ!

ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில், இரண்டாவது இடத்திலிருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தற்போது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். மாடர்ன் டே கிரிக்கெட்டின் ரன்மெஷின் என இந்தியஅணியின் கேப்டன் கோலி அழைக்கப்பட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் கோலி – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இவர்களில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் சமூகவலைதளங்களில் நீண்ட நாட்களாக […]

Categories

Tech |