சிம்மம் ராசி அன்பர்களே, இன்று அதிகாலையிலேயே அனுகூலம் தரும் நாளாகவே இருக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதமாக நடந்து கொள்வார்கள். வெளிநாட்டு தொடர்பு நலம் பயக்கும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம். இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். நண்பர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது ரொம்ப நல்லது. பெரியோரிடம் ஆலோசனையை கேட்டு எந்த ஒரு விஷயங்களையும் மேற்கொள்ளுங்கள். இன்று முயற்சிகள் ஓரளவு வெற்றியை தரும். […]
