தி.மு.க பிரச்சாரத்தின் போது திண்டுக்கல் லியோனி பெண்கள் குறித்து பேசிய நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து நட்சத்திர பேச்சாளரான லியோனி கடந்த 23ஆம் தேதி பிரச்சாரம் செய்துள்ளார். அந்த பிரச்சாரத்தின்போது லியோனி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் […]
