கோவாவில் நடந்த தடகள போட்டியில் வெற்றி பெற்று சொந்த ஊருக்கு திரும்பிய மாணவியை பொதுமக்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வாட்டாகுடியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இளங்கலை 1-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ கோவாவில் நடந்த தடகள போட்டியில் 2-ஆம் இடம் பிடித்துள்ளார். மேலும் தெற்காசிய அளவில் நேபாளத்தில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு […]
