தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்குப்பின், பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்று முடிவுசெய்வதற்காக நடத்தப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பேரவைத் தலைவர் தனபால். அப்போது அவர், ”நாளை காலை மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கான இரங்கல் குறிப்பு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.ஹெச். பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் […]
