அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பேன் என்று கர்நாடக மாநில சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் + மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு கவிழ்ந்து குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பாஜக புதிய அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்கவேண்டுமென்று […]
