பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் கருவைக் கலைத்து அறிக்கை தாக்கல் செய்ய சேலம் அரசு மருத்துவமனை முதல்வருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் துப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டருகே வசிக்கும் இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இதுதொடர்பான புகார் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அச்சிறுமி தற்போது 12 வாரக் கர்ப்பமாக உள்ளதாகவும், தன்னுடைய பெண்ணுக்கு அரசு செலவில் கருக் கலைப்பு செய்யக்கோரியும், 4 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு […]
