Categories
தேசிய செய்திகள்

“பெண் சிட்டி ரோபோ” மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டம்….. இஸ்ரோ சிவன் பேட்டி….!!

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக விண்ணுக்கு அனுப்பப்பட உள்ள ரோபோவை இஸ்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது.  விண்ணுக்கு மனிதனை அனுப்ப கூடிய திட்டம் ககன்யான். இதற்காக மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாயை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு ஒதுக்கி உள்ளது. இதற்கான பணிகளை இஸ்ரோ தொடங்கிவிட்டது. ஏற்கனவே விண்ணுக்கு மனிதனை அனுப்ப கூடிய திட்டம் இதுவரை செயல்படுத்தியது இல்லை. எனவே அந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் ஆளில்லா இயந்திரத்தை வைத்து சோதனை […]

Categories
தேசிய செய்திகள்

விண்வெளிக்கு மனிதர்கள்…. வீரர்கள் தேர்வு தொடங்கியது…..!!

ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கான ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகின்றது. விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வரக்கூடிய 2022ஆம் ஆண்டு செயல்படுத்த இருப்பதாக இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது.அமெரிக்கா , ரஷ்யா , சீனா உள்ளிட்ட நாடுகள்  விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளனர். அந்த வரிசையில் இந்தியாவும் இணைய உள்ளது. இஸ்ரோ_வின் ககன்யான் திட்டத்தின் மூலம்  வருகின்ற 2022-ஆம் ஆண்டு 3 வீரர்கள் விண்வெளிக்கு செல்ல இருக்கின்றார்கள். அதற்காக விண்வெளி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக முதற்கட்ட பணி நிறைவடைந்துள்ளது. மொத்தம் 30 […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 22ல் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும்…. இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

ஜூலை 22ஆம் தேதி சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட இருப்பதை  நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. கடந்த 15ஆம் தேதியன்று இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி 56 நிமிடங்களுக்கு முன்பு கவுன்டவுன்  நிறுத்திவைக்கப்பட்டது. அதன்பின் தொழில் நுட்ப குழு மேற்கொண்ட ஆய்வில் ஏவுகணையின் கிரையோஜெனிக் இன்ஜின் வாய் […]

Categories
தேசிய செய்திகள்

இடி,மழையடித்தாலும் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும்… இஸ்ரோ தலைவர் பேட்டி…!!

இடியுடன் மழை பொழிந்தாலும்  சந்திராயன் 2 விண்கலம் எவ்வித தடையுமின்றி  விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். சந்திராயன் 1 விண்கல ஆராய்ச்சியை தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில்   செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கொண்டு செல்வதற்க்காக ஜிஎஸ்எல்வி மார்க் 2 என்ற ராக்கெட் பிரத்யேகமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த   ராக்கெட் சுமார் 4000 கிலோ எடை வரை தாங்கி செல்லக்கூடிய  திறன் கொண்டது. ஆகையால் இதற்கு பாகுபலி என்ற மறுபெயரும் உண்டு. இந்நிலையில்   திருப்பதி ஏழுமலை வெங்கடேஸ்வரர் கோவிலில் […]

Categories
தேசிய செய்திகள்

“விண்வெளி ஆராய்ச்சிக்கு காங்கிரஸ் அங்கிகாரம் அளிக்கவில்லை “முன்னாள் இஸ்ரோ தலைவர் பகிரங்க குற்றசாட்டு ..!!

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பாஜக முன்னாள் இஸ்ரோ தலைவரும் , பாஜக உறுப்பினருமான மாதவன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார் . வருகின்ற ஜூலை 15ம் தேதி சந்திராயன்-2 விண்கலமானது விண் வெளியில் செலுத்தப்பட இருக்கிறது. இதுகுறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் மற்றும் பாஜகவின் உறுப்பினருமான மாதவன் நாயர் கூறியதாவது, ஜூலை 15ம் தேதி இஸ்ரோ சார்பில்  விண்வெளியில் செலுத்தப்பட உள்ள சந்திராயன்-2 விண்கலம் ஆனது சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறோம்.. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அணுசக்தி மற்றும் விண்வெளி துறையை பெற்றுக்கொண்ட மோடி ….!!

அணுசக்தி, விண்வெளி, ஓய்வூதியம் ஆகிய துறைகளை பிரதமர் நரேந்திர மோடி தன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை அமைத்தது. நேற்று மாலை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு தனி தனி இலாகாக்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களில் […]

Categories
உலக செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஃபால்கன் 9 !!

ஃபால்கன் 9 ராக்கெட்,  அமெரிக்க நேரப்படி அதிகாலை 2.48 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களுடன் கூடிய விண்கலனை, ஃபால்கன் 9 ராக்கெட் மூலமாக , ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது. புளோரிடாவின் கேப் கனவெரலில் இருந்து அமெரிக்க நேரப்படி அதிகாலை 2.48 மணிக்கு   விண்ணில் செலுத்தப்பட்டது.   2 ஆயிரத்து 500 கிலோ  எடையுள்ள  ஆராய்ச்சிப் பொருட்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை இது சுமந்து செல்கிறது . […]

Categories
உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம்….. படம் பிடித்த நாசா….!!!!

முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை படம் பிடித்து வெளியிட்டது நாசா ஆராய்ச்சி மையம்.  பல்வேறு நாடுகளால் ஆராய்ச்சி செய்யப்படும் கோள் செவ்வாய். கடந்த ஆண்டு ‘இன்சைட் ‘ என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து செலுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தின் உள்ளே   நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்த விண்கலத்தில் பதிவாகியுள்ளது.  செவ்வாய் […]

Categories

Tech |