நான் துண்டு சீட்டு இல்லாமல் பேசுகின்றேன் சவாலுக்கு ஸ்டாலின் தயாரா என்று தமிழிசை ஸ்டாலினை சாடியுள்ளார். நெல்லையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது , நீங்கள் தூண்டு சீட்டு இல்லாமல் எங்கேயும் பேச மாட்டிங்களே என்று பாஜகவினர் விமர்சனம் செய்கின்றார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எதையும் ஆதாரத்தோடு சொல்லனும். வாய்க்கு வந்தபடி சொல்லிட்டு போக கூடாது. ஆதாரம் இல்லாமல் தமிழிசை மாதிரி ,H.ராஜா மாதிரி பேச கூடாது என்று ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு […]
