தமிழக அரசு தமிழ் மொழியைக் காக்க தமிழ் சொற்குவை வலைதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் பேசும் போதும் எழுதும் போதும் பிற மொழிச் சொற்களின் கலப்பை தவிர்க்கவும் கலைச் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும் சொற்குவை வலைதளத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டு sorkuvai.com எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பிறமொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவும் […]
