தொடரும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கும் கொல்லிமலையில் அதிக மூலிகைகளும் கனிம வளங்களும் காணப்படுகின்றன. இதில் அரசு சொந்தமான புறம்போக்கு நிலங்களிலும், வனத்துறைக்குச் சொந்தமான வனப்பகுதிகளிலும் இருக்கும் கனிம வளங்கள் தொடர்ந்து வெட்டி எடுக்கப்பட்டு வருவதாக அப்ப்குதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ,இயற்கை அழகு சிதையும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்ததோடு மாவட்ட நிர்வாகம் […]
