புதுச்சேரி முத்தரையர் பாளையம் அருகில் ஆய குளத்தை தூர்வாரும் பணியில் வாட்ஸ்அப் குழு இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விலாச பட்டையில் உள்ள ஏரியை புதுச்சேரி இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்து தூர் வாரினர். இதை தொடர்ந்து நீர் நிலை பாதுகாப்பு குழு என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணியில் புதுச்சேரி இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை புதுச்சேரியில் உள்ள 18 குளங்களை இவர்கள் தூர்வாரி […]
