பெண்ணிடமிருந்து சங்கிலியை பறிக்க முயன்ற திருடனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வடக்குவெளி கிராமத்தைச் சார்ந்தவர் தர்மலிங்கம்-மீனா தம்பதியினர். மீனா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு வடக்குவெளி கிராமத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீனாவிடம் தனது மோட்டார் சைக்கிளில் ஏறுங்கள் ஊருக்குள் சென்று விடுகிறேன் என்று கூறியுள்ளார். […]
