டாஸ்மாக் கடைக்குள் பாம்பு நுழைந்து விட்டதால் மது பிரியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நெய்தலூர் காலனி பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் போது, மதியம் சுமார் ஒரு மணி அளவில் டாஸ்மாக் கடைக்குள் வயல் வெளியிலிருந்து சாரை பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. இந்நிலையில் பாம்பைப் பார்த்ததும் மது வாங்க நின்ற மது பிரியர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து […]
