சட்டவிரோதமாக காரில் கடத்தி வந்த மதுபானத்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடத்தல் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரி ஜான் ஜோசப், காவல்துறை அதிகாரிகள் மஞ்சுநாதன், செல்வம் ஆகியோர் பொம்மையார்பாளையம் பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான 1128 மதுபான பாட்டில்கள் காரில் இருந்ததைக் காவல்துறையினர் […]
