சிங்கப்பூருக்கு சென்னையிலிருந்து கடத்த முயன்ற 25 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகள் மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை சோதனை செய்துள்ளனர். அப்போது இரண்டு பெட்டிகளில் சுத்தமான படுக்கை விரிப்புகளை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அதில் எழுதப்பட்டிருந்தது. மேலும் அந்தப் பெட்டிகள் அதிக எடையுடன் இருந்ததால் சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அந்த பார்சல் பெட்டிகளை பிரித்து ஆய்வு செய்துள்ளனர். […]
