சிறுமியை பணியில் அமர்த்திய குற்றத்திற்காக பட்டாசு ஆலை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் சுப்புமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பனையடி பட்டியில் சொந்தமாக பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிப்பதாகவும், சிறுமிகள் பணிகளில் ஈடுபடுத்த படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் வருவாய்த் துறையினர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி தாழம்பூ ராஜா பட்டாசு ஆலைக்கு நேரில் சென்று விசாரணை […]
