தோட்டத்தில் வைத்து காட்டுப்பன்றி சிறுமியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள லாலாபுரத்தில் பழனி முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரதி(12) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பழனி முருகனின் குடும்பத்தினர் தோட்டத்திற்கு மல்லிகைப்பூ பறிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் பூ பறித்துக் கொண்டிருந்த போது திடீரென வந்த காட்டுப்பன்றி சிறுமியை கடித்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதனால் படுகாயமடைந்த சிறுமியை அவரது பெற்றோர் […]
