வலிப்பு ஏற்பட்டு சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் கூலி தொழிலாளியான சாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷ்கா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த அனுஷ்காவை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது வழக்கம். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த போது திடீரென அனுஷ்காவிற்கு வலிப்பு […]
