தண்ணீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீலேபள்ளி கிராமத்தில் கூலி தொழிலாளியான பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாவண்யா(17) என்ற மகள் இருந்துள்ளார். நேற்று முன்தினம் லாவண்யா மலைச்சந்து பகுதியில் இருக்கும் கரடிமலை ஏரிக்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாவண்யா தண்ணீரில் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் லாவண்யாவை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவரை மீட்க […]
