வீட்டுக்குள் புகுந்து திருடிய குற்றத்திற்காக 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சேகர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]
