பாழடைந்த கிணற்றிலிருந்து மனித எலும்புக்கூடு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் டி.வி.டி காலனி செந்தூரன் நகரில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கிணறு இருக்கிறது. இந்த கிணறு தற்போது குப்பைகள் நிறைந்து பாழடைந்து காணப்படுவதால் கழிவு நீரும் தேங்கி கிடைக்கிறது. நேற்று கிணற்றில் மனித எலும்புக்கூடு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்களை […]
