திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ள சிவராத்திரியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்படுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் கோவிலாகும். இந்த கோவிலில் கார்த்திகை தீபம் உள்ளிட்ட முக்கிய சிறப்பு நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதேபோல் மகாசிவராத்திரி தொடங்கிய கோயிலாகவும் இது கருதப்படுகிறது. சிவனின் அடிமுடி இவையிரண்டையும் திருமாலும் பிரம்மாவும் கணக்கிட முடியாமல் தவித்த போது சிவபெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சி அளித்த திருநாளே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. […]
