சிவகாசி முதலிப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியாகியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி முதலிப்பட்டி அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 8 […]
