Categories
சிவகங்கை மாநில செய்திகள்

சிவகங்கையில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 10 பேர் குணமடைந்தனர்!

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் நேற்று மட்டும் 60 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,020ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 54.11% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமி…. பாலியல்….. கொலை வழக்கு….. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை….. நீதிமன்றம் தீர்ப்பு….!!

கடந்த 2013ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்தவர் பச்சைமுத்து. இவர் சிவகங்கை பீலமேடு கிராமம் பகுதியில் கீழேடு  கிராமத்திற்கு கடந்த 2013ம் ஆண்டு கூலி வேலைக்காக வந்துள்ளார். வந்த இடத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரின் மொபைல் எண்ணை தெரிந்து கொண்டு உள்ளார் பச்சைமுத்து. இதையடுத்துக் கூலி  வேலையை நிறுத்திவிட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடுங்க”… ‘கொரோனா வராது… காரைக்குடி உணவகத்தின் ஸ்பெஷல்..!!

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க இங்கு சமைக்கப்படும் ‘சின்ன வெங்காய ஊத்தப்பம்’ சாப்பிடுங்கள் என்று தனியார் உணவகம் ஒன்றில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

5 கோடி செலவு….. இடிந்து விழும் நிலையில் ஜெட்டிபாலம்….. பொதுமக்கள் அதிருப்தி…!!

சிவகங்கையில் புதிதாக கட்டிய பாலம் இடிந்து விழும் அளவிற்கு சேதமானது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழக்கரையில் இருந்த ஜெட்டி பாலம் பெரிதளவில் சேதமடைந்தை தொடர்ந்து சுமார் 5 கோடியே 31 லட்சம் செலவில் புதியதாக பாலம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்ட சில மாதங்களிலேயே பாலத்தின் தரைபகுதியில் விரிசல் ஏற்ப்பட்டது. பின் சில மாதங்களிலேயே அலைகளை தடுக்கும் வண்ணம் இருந்த தடுப்பணைகளும் சேதமடைந்தன. இவ்வாறு நாளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

உலகமே மெச்சும் கீழடி நீர் மேலாண்மை – தமிழ்நாடு தொல்லியல் துறை …!!

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் குழாய்களும், வடிகட்டி போன்ற அமைப்பும் நீர் மேலாண்மையில் கிமு 6ஆம் நூற்றாண்டிலேயே கீழடி மக்கள் சிறந்து விளங்கியிருப்பதை காட்டுவதாக, தமிழ்நாடு தொல்லியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மதுரைக்கு அருகே கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறையின் சார்பாக ஐந்து கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இந்த ஆய்வில் பல்வேறு வியக்கத்தக்க தொல்லியல் அடையாளங்கள் கிடைத்துள்ள நிலையில், இரண்டாம் அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானம், நீர் வடிகால் அமைப்பு, தொட்டி போன்ற அமைப்பின் தொடர்ச்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உனக்கு மார்க் அதிகம் போடுறேன்… “19 வயது நர்ஸிங் மாணவி பாலியல் பலாத்காரம்”… பாஜக பிரமுகர் கைது ..!!

சிவகங்கையில் பாஜக பிரமுகர் ஒருவர் 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  சிவகங்கை மாவட்டம் மேலூர் சாலை பொதிகை நகரை சேர்ந்தவர் சிவகுரு துரைராஜ். 67 வயதான இவர் சிவகங்கை மதுரை முக்கு பகுதியில் செவிலியர் பயிற்சி மற்றும் கேட்டரிங் தொழில் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் இவர் பா.ஜ.கவின் சிவகங்கை மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது செவிலியர் பயிற்சி நிறுவனத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“போட்டோ காட்டி மிரட்டல்” 9ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 2 பேர் கைது….!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த  2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை அடுத்த ஆரம்ப சேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பள்ளி மாணவிக்கும் ஆரம்ப சேரி கிராமத்தைச் சேர்ந்த விஷ்வா என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியுடன் நெருக்கமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கீழடி 5 ம் கட்ட தொல்லியல் ஆய்வில் இரட்டைச்சுவர் கண்டுபிடிப்பு!

கீழடி தொல்லியல் ஆய்வில் தமிழர்களின் தொன்மை பற்றிய முக்கிய ஆதாரம் கிடைத்தது.  சிவகங்கை  மாவட்டம் கீழடியில் 5 ம்  கட்ட தொல்லியல் ஆய்வு கடந்த 13ம் தேதியில்  இருந்து நடைபெற்றுகொண்டு இருக்கிறது. இன்று காலை வழக்கம் போல் ஆய்வு நடைபெற்றபொழுது நிலத்தில் ஏதோ சுவர் போல் தென்பட்டது. அதனை கண்டு  ஆச்சரியம் அடைந்த ஆய்வாளர்கள் மீண்டும் தோண்ட தொடங்கினர் .அப்பொழுது அந்த சுவர் நீண்டுகொண்டெய் சென்றது. அதனை தொடர்ந்து அதற்கு  அருகாமையில் தோண்டிய  பொழுது மேலும் ஒரு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“1 ரூபாய்க்கு 1 டீ-ஷார்ட்” சிவகங்கையில் சிறப்பு விற்பனை…!!

சிவகங்கையில் துணி கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு டீ_ஷார்ட் விற்பனை செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட துணிக்கடையில் 1 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீ-ஷர்ட்டை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் புதிதாக துணி கடை திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு கடையில் நேற்று மக்களுக்கு மேக்ஸ் பிராண்ட் வகை டீ-ஷார்ட் தலா ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனை வாங்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்ட நிலையில் முதலில் வந்த 599 வாடிக்கையாளர்களுக்கு தலா […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள்

“5_வது கட்ட அகழாய்வு பணி நிறுத்தி வைப்பு” அனுமதி வழங்காத தமிழ் வளர்ச்சி துறை….!!

தமிழ் வளர்ச்சி துறையின் அனுமதி இல்லாத காரணத்தால் கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ளது கீழடியில் பண்டைய காலத்து தமிழர்களின்  நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்களை  கண்டறிய கடந்த  2015_ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை , ஓடுகள், ஆயுதங்கள், கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் அதிகமான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“அமமுக பிரமுகர் வெட்டிக்கொலை “சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவங்கையில்  அமமுக பிரமுகர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக பிரமுகர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலையில் நடைபயிற்சி சென்ற போது திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிங்கம்புணரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் நிதிஉதவி!!!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் ரூபாயை அரசு வழங்கியது . சிங்கம்புணரி அருகே  கே.உத்தம்பட்டியை சேர்ந்தவர்  விவசாயி கருப்பையா. அவர் தனது  மனைவி சின்னம்மாள் மற்றும்  இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் சின்னம்மாள் வீட்டில் சமையல் வேலைகளை   செய்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது . இதில் சின்னம்மாளும்,  தூங்கிக் கொண்டிருந்த 5 வயது மகன் வீரன் மற்றும்  2 வயது பெண் குழந்தை திவ்யதர்ஷினியும்   உடல்  கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நடந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வறட்சியால் பாதிக்கப்பட்ட மிளகாய் சாகுபடி ..விவசாயிகள் வேதனை!!

சிவகங்கை மாவட்டம் இடையமேலூர்  பகுதிகளில்   நீர் பற்றாக்குறையால் மிளகாய் சாகுபடி  பாதிக்கப்பட்டுள்ளது.  சிவகங்கை மாவட்டம் ,மங்காம்பட்டி, கூட்டுறவுப்பட்டி போன்ற  கிராமங்களில் சுமார் 50 ஏக்கர்களில்    மிளகாய்  பயிரிடப்பட்டுள்ளது. ஆனால்  போதிய தண்ணீர்  இல்லாததால்  மிளகாய் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த  வேதனையில் உள்ளனர் .

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எரிவாயு சிலிண்டர் வெடித்து தாய் தனது இரு குழந்தைகளுடன் உயிரிழந்த பரிதாபம் …

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே  எரிவாயு சிலிண்டர் வெடித்து , தாய் தனது  இரு குழந்தைகளுடன் உயிரிழந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சிங்கம்புணரி அருகே  கே.உத்தம்பட்டியை சேர்ந்தவர்  விவசாயி கருப்பையா. அவர் தனது  மனைவி சின்னம்மாள் மற்றும்  இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் சின்னம்மாள் வீட்டில் சமையல் வேலைகளை   செய்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது . இதில் சின்னம்மாளும்,  தூங்கிக் கொண்டிருந்த 5 வயது மகன் வீரன் மற்றும்  2 வயது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கடும் பயிற்சிக்கு கிடைத்த வெற்றி !!…”தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 3 மாணவிகள் தேர்வு “

டெல்லியில் நடைபெற இருக்கும்  தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கான தேர்வில் சிவன்கையை சேர்ந்த மஃமூன்று மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்  சிவகங்கை மாவட்டத்தில்  விளையாட்டு அரங்கினுள்  அமைந்துள்ள நீச்சல் குளத்தில்  மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளத்தில்  கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்கள் பயிற்சி பெற்றுவருகின்றனர்  கடலூர் மாவட்டம்  நெய்வேலி பகுதியில்  நடைபெற்ற சென்னை  மண்டல அளவிலான போட்டியில்  சிவகங்கை மாவட்டத்தில் இருந்து  11 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் நேத்ரா,சண்முகப்ரியா ,சாரிகா ஆகியோர் வெற்றி பெற்று வரும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வெல்டிங் பட்டறை தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு “சிவகங்கையில் பரபரப்பு !!..

சிவகங்கை அருகே, வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்த  தொழிலாளி மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள  நாட்டரசன்கோட்டை என்னும் கிராமத்தை  சேர்ந்தவர் வினோத்குமார். இவர் அப்பகுதியில்  உள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்  அப்பகுதியில் தனது மோட்டார் சைக்கிள் வாகனத்துடன் நின்று கொண்டிருந்த வினோத்குமாரை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். […]

Categories
அரசியல்

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி… ஹெச்.ராஜா_வை எதிர்த்து களம் இறங்குகிறார்…!!

சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்  காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . தமிழகம் , புதுச்சேரி என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில்  9 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது . காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் யார் வேட்பாளர் என்று அறிவிப்பதில் தொடர்ந்து   இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி […]

Categories

Tech |