அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் இந்திய வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார். ஒடிசா மாநிலத் தலைநகர் புபனேஸ்வரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பிப்ரவரி 24 மற்றும் 25ஆம் தேதிகளில் இடதுசாரி தொண்டர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இந்தியப் பயணத்துக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள். அது டெல்லியாகவோ அல்லது குஜராத்தாகவோ இருக்கலாம். முதலில் அமெரிக்கா அழுத்தம் […]
