மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள எலவமலை கிராமத்தில் செல்வராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். இதில் மூத்த மகளான ஷாலினி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இளைய மகள் நிஷா அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு சகோதரிகள் லட்சுமி நகர் பகுதியில் இருக்கும் பஞ்சாபி ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். […]
