2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் கிராமத்தில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், பிரியங்கா என்ற மகள் மற்றும் சிராஜ், ஆரியன் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கதிர்வேல் தனது குடும்பத்தினருடன் மும்பையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தனது சொந்த ஊரில் வசிக்கும் அண்ணன் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் […]
