வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிறுமி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவர்சினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தர்மத்துப்பட்டியில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறுமி தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது அவ்வூரில் உள்ள குளத்தில் சிறுவர்கள் மீன்பிடிப்பதை அருகில் நின்று வேடிக்கை பார்த்துள்ளார். பின்னர் திடிரென […]
