குழந்தை ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வளையக்கரணை உமையாள் பரணஞ்சேரி பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிரஸ்சரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரதீஷா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 2 1/2 வயது குழந்தையான பிரதீஷா திடீரென காணவில்லை. அதன்பின் குழந்தை காணவில்லை என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருகாமையில் இருக்கும் ஏரி பகுதிகளில் தேடி பார்த்துள்ளனர். பின்னர் […]
