காலமான நடிகர் ரித்தீஷின் குடும்பத்திற்கு நடிகர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள கண்டியில் பிறந்தவர் நடிகர் ரித்தீஷ். இவர் சின்னப்புள்ள, நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரித்தீஷ் தற்போது வெளிவந்த LKG படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ரித்தீஷ் 2009_ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.46 வயதான ரித்தீஷ் இன்று அவரது இல்லத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் இழப்பிற்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரித்தீஷின் இழப்பிற்கு […]
