சிங்கப்பூரில் கொரோனா (கொவைட்-19) பாதிப்பு அதிகம் உள்ளதால் அவசியமற்ற பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பலியானவா்களின் எண்ணிக்கை 2,442ஆக உயா்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவை தவிர்த்து, ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது. தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 […]
