கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்ற பாடலை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ வெளியிட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட்-19) காரணமாக உலக நாடுகள் முழுவதும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்து கொள்வதற்காகவும், பிறருக்கு பரவகூடாது என்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் தங்களது மக்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும், ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளன. இந்தநிலையில் […]
