ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து 2013ஆம் வருடம் வெளியான திரைப்படம் சிங்கம் 2. இந்த திரைப்படத்தில் வில்லனாக டேனி கதாபாத்திரத்தில் செக்வுமே மால்வின் என்பவர் நடித்திருப்பார். 20-க்கும் அதிகமான கன்னடம், பாலிவுட் படங்களில் நடித்த இவரை சமீபத்தில் பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தொழில் அதிபர்களுக்கும் மாணவர்களுக்கும் போதைப் பொருள் விநியோகம் செய்ததாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சூர்யாவின் சிங்கம் 2 திரைப்படத்தில் போதைப்பொருள் கடத்துபவராக நடித்த இவர் நிஜத்திலும் […]
