ஊரடங்கு காலத்தில் திருமணங்கள் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தியதோடு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் ஓன்று திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பதாகும். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணங்களில் குறைந்த அளவிலான உறவினர்கள் மட்டும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி சென்றுள்ளனர். இதுகுறித்து புதுமண தம்பதிகள் கூறும்போது திருமணத்தை இவ்வாறு எளிய […]
