Categories
சினிமா தமிழ் சினிமா

“எதிர்க்கும் தியேட்டர் உரிமையாளர்கள்”… இணையதளத்தில் ரிலீஸ் ஆக இருக்கும் சித்தார்த், வைபவ் படங்கள்….!!

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து சித்தார்த், வைபவ் படங்களையும் இணையதளத்தில் வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தயாரிப்பில், ஜோதிகா நடித்துள்ள படம்தான் பொன்மகள் வந்தாள். இப்படத்தை அப்படக்குழுவினர் தியேட்டர்களில் வெளியிடாமல் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். இதற்க்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தியேட்டர் அதிபர்கள் சூர்யாவின் “சூரரை போற்று”படம் உள்பட வேறு எந்த படமும் தியேட்டர்களில் இனி நாங்கள் வெளியிட மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் திரையுலகில் […]

Categories
மாநில செய்திகள்

போராட்டம் நடத்திய 5000 பேர் மீது வழக்கு…!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்திய திருமாவளவன்,  ஜவாஹிருல்லா, நடிகர் சித்தார்த் உள்பட 5000 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியுடன் சேர்ந்து பல்வேறு அமைப்புகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை நேற்று முற்றுகையிட முயன்றனர். அப்போது பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பட்டினம்பாக்கம் போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது, சட்டவிரோதமாக ஒன்று கூடியது உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

திருமா, சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்குப் பதிவு..!!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 54 அமைப்புகளைச் சேர்ந்த 600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவ அமைப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன், இந்திய தவ்ஹீத் கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 54 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

”ஜிகர்தண்டா பாபி சிம்ஹா கதாபாத்திரம்” தேசிய விருது பெறுவாரா  வருண் தேஷ்…!!

ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்_கான வால்மீகி படத்தில் பாபி சிம்ஹா  கதாபாத்திரத்தில் வருண் தேஷ் நடிக்கிறார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் , பாபி சிம்ஹா , விஜய் சேதுபதி , லட்சுமி மேனன் , கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மெகா ஹிட்டான படம் ஜிகர்தண்டா. இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில் நடித்த பாபி சிம்ஹா விற்கு தேசிய விருது கிடைத்ததை தொடர்ந்து வால்மீகி என்ற பெயரில் தெலுங்கில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கிரேஸி மோகன் மறைந்தது பெரும் இழப்பு” நடிகர் சித்தார்த் இரங்கல்..!!

நடிகர் சித்தார்த் கிரேஸி மோகனுக்கு ட்விட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்  பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசன கர்த்தாவுமான கிரேஸி மோகனுக்கு  நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பால் அவதிப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணிக்கு கிரேஸி மோகன் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த கிரேஸி மோகனுக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் சித்தார்த் கிரேஸி மோகனுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில், “கிரேஸி மோகன்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சித்தார்த்தும், திரிஷாவும் இணைந்து ஒரு படம்…!!

இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘அந்தாதுன்’ தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சித்தார்த்தும், திரிஷாவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  சித்தார்த்தும், திரிஷாவும் ஆய்த எழுத்து, அரண்மனை-2, தெலுங்கில் நூஒஸ்தனன்டே போன்ற 3 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தாதுன் படத்தில் ஆயுஷ்மேன் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்த இந்த படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்து வசூல் ரீதியாக நல்ல […]

Categories

Tech |