தெலுங்கானாவில் 29 வயதான கான்ஸ்டபிள் ஒருவர் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்று கூறி மன உளைச்சலுடன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 29 வயதான சித்தாந்தி பிரதாப் என்பவர் கடந்த 2014-ஆம் ஆண்டு காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்துள்ளார். பொறியியல் பட்டதாரியான இவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இது தொடர்பாக அவர் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டதாவது, சார்மினார் காவல் நிலையத்தில் சித்தாந்தி பிரதாப் என்னும் நான் சில கோரிக்கைகளை உங்களின் கவனத்திற்கு முன் […]
