காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக மேலும் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் அருகே உள்ள தனியார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நான்கு பேர் குழுவாகப் பேசிக் கொண்டிருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினரைக் கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல […]
