குமரிமாவட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிவடைந்த பின் குற்ற சம்பவங்கள் குறையும் என குமரி மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆயுதப்படை வளாகத்தில் ரூபாய் 9.71 லட்சத்தில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை இன்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் திறந்து வைத்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியபோது, அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் எண் , நம்பர் பிளேட் தெளிவாக தெரிவதால் […]
