டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்துக்கு வெளியே மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, திடீரென ஒருவர் துப்பாக்கியால் சுட்டார் இதில்ஒருவர் காயம் அடைந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. CAA திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் என்பதால், ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தியின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாக சென்றனர். பேரணியாக சென்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். […]
