தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்களுக்கு கொடுப்பதற்காக கள்ளச்சாராயம் காய்ச்சியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மதுவிலக்கு காவல்துறையினருக்கு மூலனூர், கும்பம் பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் என்பவரை மடக்கிப் பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட […]